தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

இலங்கை தமிழர்கள் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பாக உள்ளனர்: தெற்காசிய நிலையத்தின் முன்னாள் விரிவுரையாளர்

யாழில் வீடுவீடாகச் சென்று இராணுவத்தினர் பதிவு: இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பாம்?
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 02:47.57 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளிலே இந்தப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க மையத்தினால் 1,350 இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்றிட்டத்திற்காகவே யாழ்ப்பாணத்தில் இந்தப் பதிவுகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக படைத் தலைமையகம் குறிப்பிட்டது.
இந்த செயற்றிட்டத்திற்காக நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முறையே ஏப்ரல் 17 மற்றும் 27ஆம் திகதிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தப் பதிவுகளின் போது அவற்றை மேற்கொண்ட இராணுவ அதிகாரிகள் பங்குகொண்டோரின் மூலப்பிரதிகளை திருப்பிக் கொடுக்காது தம்முடன் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlu2.html
இலங்கை தமிழர்கள் மேற்குலக நாடுகளில் பாதுகாப்பாக உள்ளனர்: தெற்காசிய நிலையத்தின் முன்னாள் விரிவுரையாளர்
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 04:24.26 AM GMT ]
இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளபோதும், வெளிநாடுகளில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்கு மற்றும் தெற்காசிய நிலையத்தில் முன்னாள் விரிவுரையாளராக பணியாற்றிய ஒருவரின் கட்டுரையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாண சமூகம் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரே படித்த சமூகமாக கருதப்பட்டது.
இந்த சமூகத்தவர்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று தமது சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வந்தது.
இந்தநிலையில் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் உட்பட்ட ஏனைய பகுதிகளின் தமிழர்களும் மேற்கத்தைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
இன்று அவர்கள் பல்வேறு இடங்களில் தொழிலாற்றுவதன் மூலம் யாழ்ப்பாண பொருளாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை யோசனையின் பின்னர் இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை பலப்படுத்தி வருவதுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சான்றுகளை சமர்ப்பிப்பர் என்ற அச்சத்தில் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமே புலம்பெயர்ந்த 16 அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யக்காரணம் என்றும் தெற்கு மற்றும் தெற்காசிய நிலையத்தின் முன்னாள் விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlu6.html

Geen opmerkingen:

Een reactie posten