அமெரிக்க நாட்டில் கேரேஜில் அத்து மீறி நுழைந்த குற்றத்திற்காக ஜேர்மன் மாணவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மொண்டா மாநிலத்தில் மார்கஸ் கார்மா என்ற நபர், தனது கேரேஜில் அத்துமீறி நுழைந்த ஜேர்மனை சேர்ந்த டிரென் டெட் (17) என்ற மாணவனை சுட்டுக்கொன்றுள்ளார்.
இதனால் டிரென் குடும்பத்தின்ர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மார்கஸ் கொலை குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிரென் தந்தை கூறுகையில், எனது மகன் தனிமையில் தொலைபேசியில் உரையாடுவதற்காக கேரேஜிற்குள் நுழைந்ததாகவும், திருடும் நோக்கத்துடன் நுழையவில்லை எனவும் கூறியுள்ளார்.
படிப்பில் சிறந்து விளங்கும் அவனுக்கு தேவையான பொருட்களை அனைத்தும் வாங்கி கொடுத்ததால், அவன் திருடுவதற்கான அவசியம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா ஒரு ஆபத்தான நாடு என்றும் இங்கு யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்து கொள்ளலாம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://world.lankasri.com/view.php?20260822203PnBdc4eaemOlJ4cbeC6AAbddcceMQWdbcdnlOS0e435BnZ3e034E80o23
|
Geen opmerkingen:
Een reactie posten