தேசிய கொடி ஏற்றவேண்டும் லண்டனில் மக்கள் போராட்டம்: திகைத்துப்போன BTF !
18 May, 2014 by admin
லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றது. இதனை BTF ஏற்பாடு செய்திருந்தார்கள். இன் நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் தமிழீழ தேசிய கொடியை ஏற்றவேண்டும் என்று பெருமளவான மக்கள் பிரித்தானிய தமிழர் பேரவையினரிடம்(BTF) கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அந்த அமைப்பில் உள்ள சில நபர்கள் இதனை எதிர்தார்கள். தமிழீழ தேசிய கொடியை ஏற்ற முடியாது என்றும், அது பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தும் என்று BTF அமைப்பில் உள்ளவர்கள் கூற முற்பட்டார்கள். இதனை கடுமையாக எதிர்த தமிழ் மக்கள், இசைப்பிரியாவின் புகைப்படங்களை பார்த்தீர்களா ? அதனை BTF அமைப்பு தான் வெளியிட்டதாக நீங்கள் செதிகளையும் அனுப்பினீர்கள், ஆனால் தேசிய கொடியை மட்டும் ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
இளையோர்கள் பலர் உடனே மேடைக்குச் சென்று தமிழீழ தேசிய கொடியை ஏந்தி, அதனை முறையாக ஏற்றிய பின்னரே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். தமிழீழ தேசிய கொடியை நாம் மறந்தால், எமது அடையாளத்தை இழந்தவர்களாக நாம் மாறிவிடுவோம் என்று அவர்கள் உரக்க கூறினார்கள். இதேவேளை தேசிய கொடியை , ஏற்ற தடை விதிக்கும் வகையில், ஒளிபரப்பியை BTF உறுப்பினர்கள் கொண்டுசென்று ஒளித்து வைத்துவிட்டார்கள். இதனை அறிந்த மக்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
இறுதியில் மக்கள் திரண்டு பெரும் ஆட்சேபத்தை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் BTF உறுப்பினர்கள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலைசெய்வதாக பலர் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு காரணமாக , இறுதியில் BTF தலைவர்கள் ஓரமாக ஓடிச்சென்று சிலைக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டது. பின்னர் தான் முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகள் நடைபெற ஆரம்பித்தது. இதோ காணொளி இணைப்பு.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6852
முள்ளிவாய்க்கால் தினத்தை நடத்தும் அறுகதையை BTF அமைப்பு இழந்தது !
19 May, 2014 by admin
கடந்த 4 வருடங்களாக லண்டனில், முள்ளிவாய்க்கால் தினத்தை பிரித்தானிய தமிழர் பேரவையினர் நடாத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட, மற்றும் பல நூறு போராளிகள் அன்றைய தினம் கொல்லப்பட்டார்கள். இதனை தமிழர்கள் இன்றுவரை மறக்கவில்லை. இன் நிலையில் இன்றைய தினம் 5வது முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூரும் பொறுப்பை பிரித்தானிய தமிழர் பேரவையினர் வழமைபோல தமது கைகளில் எடுத்துக்கொண்டார்கள். சில தமிழ் இணையங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல , இன்று பெரும் மக்கள் இன் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதுவே உண்மை நிலையாகும். இதற்கு பிரித்தானிய தமிழர் பேரவையினரே(BTF) பொறுப்பு கூறவேண்டிய கடைப்பாட்டில் உள்ளார்கள். அதுபோக தமிழீழ தேசிய கொடியை சிங்களவர்கள் எவ்வாறு வெறுப்பார்களோ அதுபோல அக்கொடியை BTF உறுப்பினர்கள் வெறுத்துள்ளர்கள். கொடியை அங்கிருந்து அகற்றுமாறு மிகவும் சிம்பிளாக அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் தமிழர்கள் நெஞ்சை ஈட்டியால் குத்தியது போல இருந்தது !
அக்காவை இழந்து, அண்ணாவை பறிகொடுத்து, தங்கையை இழந்து, அப்பா அம்மாவை குண்டுக்கு பலிகொடுத்து, துயரத்தை மட்டும் நெஞ்சில் தாங்கிய வண்ணம் முள்ளிவாய்க்கால் தினத்திற்கு வந்த மக்களைப் பார்த்து, இலங்கை அரசு செய்தது சரியான செயலே என்று கூறுவதுபோல இருந்தது BTF உறுப்பினர்கள் பேசிய விதம். ஒரு கட்டத்தில் மக்கள் பொங்கி எழுந்து உறுப்பினர்களை தாக்க முனையும் அளவு கோபம் கொண்டார்கள். ஏற்கனவே தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக, பிரச்சனைகள் அவ்வப்போது விவாதிக்கபப்ட்டு வந்தது. தமிழர்கள் தமது இன அழிப்பு நாளை நினைவு கூர்கிறார்கள். அதில் வேற்றின மக்கள் கலந்துகொள்ளலாம். அதில் ஆங்கில எ.பீக்கள் கலந்துகொள்ளலாம். ஆனால் அவர்களுக்கான நாம் ஏன் எமது தேசிய கொடியை விட்டுக்கொடுக்கவேண்டும் ? இன்று தேசிய கொடி வேண்டாம் என்று சொல்வீர்கள் ! நாளை தேசிய தலைவர் பிழை என்பீர்கள், நாளை மறு நாள் போராட்டமே பிழை என்பீர்கள் ! இதனை படிப்படியாக அழிக்கவா நீங்கள் இவ்வாறு செயல்படுகிறீர்கள் ?
கடந்த வருடத்தில் ஸ்காட்லான் பொலிசார், பல மொழிகளை தமது அமைப்பில் இணைத்துக்கொண்டார்கள். அந்த வகையில் அவர்கள் தமிழ் மொழியையும் இணைக்கும்வேளை அதற்கான கொடி அல்லது சின்னம் என்ன என்று ஆராய்ந்தார்கள். அந்தவேளை சிலர் புலிக்கொடியே தமிழ் இனத்தின் தேசியகொடி என்று கூறினார்கள். அதனால் அக்கொடியை அவர்கள் தமது இணையத்தில் போட்டார்கள். உடனே BTF ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் சுதா அவர்கள் அதிர்வு இணையத்திற்கு தொலைபேசி அழைப்பை விடுத்து, தமது அமைப்பான BTF அமைப்பே புலிக்கொடியை போடச்சொல்லி சொன்னதாக கூறினார். பின்னர் மே 18 தினத்தில்(காலையில்) இசைப்பிரியாவின் சில படங்களை ஊடகங்களுக்கு கசியச் செய்து, அதனை BTF அமைப்பே வெளியிட்டதாக நாட்கம் ஆடினார்கள். இதன் காரணமாக பெருந்தொகையான மக்கள் முள்ளிவாய்க்கால் தினத்திற்கு வருவார்கள் என்று BTF அமைப்பு கனவு கண்டுள்ளது !
அதாவது ஒரு அபலைப் பெண், நிர்வாணமாக்கப்படு , கற்பழிக்கபப்ட்டு இறுதியில் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். அதனை கூட அரசியலாக்கி தமது சுய லாபத்திற்கு பயன்படுத்தியுள்ளது BTF அமைப்பு. ஒரு பெண்ணின் மானம் மீது, அவர் கற்பின் மீது, அவர் படுகொலையில் மீது நின்று அரசியல் நடத்தியுள்ளது BTF அமைப்பு. இவ்வளவு கேவலமான அமைப்பு, இனியும் எவ்வாறு தொடர்ந்து, லண்டனில் முள்ளிவாய்க்கால் தினத்தை நடத்த முடியும் ? இந்த BTF அமைப்புக்கு என்ன அருகதை உள்ளது இந்த நினைவேந்தலை நடாத்தா ? மக்களே இனி நீங்கள் தான் முடியு எடுக்க வேண்டும். அதிர்வு இணையம் எதற்கும் அஞ்சப்போவது இல்லை என்பது யாவரும் அறிந்த விடையம். மக்களுக்கு சரியான செய்தி கொண்டுசெல்லப்படவேண்டும் ! மக்களுக்கு உண்மை நிலை தெரியவேண்டும் ! அத்தோடு புரிந்திருத்தல் அவசியம் ! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! இனி மக்களே முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் ! இன் அழிப்பு நாளை படுகேவலமாக கொச்சைப்படுத்திய BTF அமைப்பை மக்கள் இனி தாமாகவே புறக்கணிப்பார்கள் !
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6853
Geen opmerkingen:
Een reactie posten