யாழ்.நல்லூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! இராணுவமும் பங்கேற்பு !
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் தடைகளுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலய முன்றலில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன் மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், சயந்தன், பரஞ்சோதி, சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை நிகழ்வைத் தடுக்கவென நல்லூரில் குவிக்கப்பட்டிருந்த படையினரும் என்ன நடக்கின்றதென்று தெரியாமல் கோயிலில் நடைபெறும் சமய நிகழ்வு என்றெண்ணி, தாமும் சேர்ந்து அஞ்சலி செய்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.canadamirror.com/canada/26152.html#sthash.7Sx4m3Hu.dpuf
இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது. அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. ஆனால், பல மேற்கு நாடுகளின் தூதுவர்கள் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்பதால், இவை பொருத்தமற்றவை என்று கனடா கூறியுள்ளது.
தோல்வியடைந்த தரப்பில் இறந்தவர்களுக்காக, தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மத வைபவங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் வட பகுதியில் சில குறிப்பிட்ட இடங்களில் இலங்கை இராணுவம், மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த தினத்தை குறிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் ஒன்று கூட நடக்க முடியாமல் போனது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அந்த அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயலுவதாலேயே இந்தத் நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்
- See more at: http://www.canadamirror.com/canada/26164.html#sthash.nkbDygyd.dpuf
Geen opmerkingen:
Een reactie posten