தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 mei 2014

நல்லூர் கந்தனைச் சுற்றி படைக் குவிப்பு! அச்சத்துடன் மக்கள்…

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வளாகத்திலும் படைத்தரப்பின் கனரக வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது இறந்தவர்களை யாழ். குடாநாட்டில் அனுஸ்டிப்பதை தடுக்கும் நோக்குடன் குடாநாடு முழுவதும் துப்பாக்கிகளோடு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு முதல் குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் தேவாலயங்களை சுற்றியும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை போர்க்காலத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் போல துப்பாக்கிகளோடும் சட்டி தொப்பிகளுடனும் பவல் கவச வாகனங்களுடனும் நல்லூர் ஆலயத்தின் முன்பாகவும் நிலை கொண்டுள்ளனர்.


வீதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கங்களும் பதியப்படுவதுடன் சிலர் மறிக்கப்பட்டு சோதனைக்கும் உட்படுத்தப்படுவதனால் குடா நாடு முழுவதும் பதற்றமான நிலை காணப்படுவதுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/69663.html
nallur_temple-02army_jaff_nalurroad

Geen opmerkingen:

Een reactie posten