தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 mei 2014

புலிகள் தொடர்ந்தும் இயங்குகின்றனர்! ஆயுதங்களையும் கொள்வனவு செய்கின்றனர்!- அமெரிக்கா!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.
எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது.

3 பேரின் கொலையும் அமெரிக்க அறிக்கையும் திடுக்கிடும் தகவல் அம்பலம் !
01 May, 2014 by admin
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நெடுங்கேணியில் உள்ள காட்டில், மூன்று தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது. இவர்கள் அனைவரும் முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்பதுபோக, அவர்கள் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்ப உள்ளார்கள் என்ற கதையை தான் இலங்கை இராணுவம் பாரிய பரப்புரையாக மேற்கொண்டு வந்தது. இதற்கான விடை தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த நாடகம் அனைத்தும் மிக மிக துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு உள்ளது. அமெரிக்கா வருடாந்தம் வெளியிட்டு வரும் பயங்கரவாதிகள் தொடர்பான அறிக்கையில், எது இடம்பெறவேண்டும் என்று இலங்கை அரசு விரும்பியதோ அது தற்போது நடந்துள்ளது ! ஆக மொத்தத்தில் இந்த அறிக்கையை குறிவைத்து தான் தமது தடுப்புக்காவலில் இருந்த, இம்மூவரையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது ! சரி வாருங்கள் விடையத்திற்கு போகலாம்.

அமெரிக்க இரட்டைக்கோபுரத் தகர்ப்புக்குப் பின்னர், அமெரிக்கா அரசு பல இயக்கங்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டது யாவரும் அறிந்ததே. இதனையடுத்து அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அவ்வியக்கங்களை தாமும் பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டன. இதில் புலிகள் இயக்கமும் சேர்க்கப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். இதுவே எமது போராட்டம் அழிய முதல் காரணமாகவும் அமைந்தது. 2002ம் ஆண்டு முதல் இன்றுவரை இந்தப் பயங்கரவாதிகள் பட்டியலில் புலிகள், இயக்கத்தின் பெயர் இருந்துவருகிறது. 2009ம் ஆண்டு புலிகளை யுத்தரீதியாக இலங்கை அரசு வென்றாலும், இலங்கையில் புலிகள் மீள இணைகிறார்கள் என்ற பொய்யான ஒரு தோற்றப்பட்டை, இலங்கை அரசு திட்டமிட்டே ஏற்படுத்தி வருகிறது. அதாவது எப்பாடுபட்டாவது , புலிகளுக்கான சர்வதேச தடையை நீடிக்கவேண்டும் என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது. 

ஆனால் அதனை தக்கவைக்க இலங்கை பெரும் நாடகங்களை ஆடிவருகிறது. 2013ம் ஆண்டுக்கான பயங்கரவாதப் பட்டியல் அறிக்கையை, அமெரிக்கா தயாரித்து வந்தது. இறுதி வரைபுகள் கடந்த மார்ச் மாதம் முதல் எழுதப்பட்டு வந்தது. இன் நிலையில் தான், தாம் தேய்வீகன், அப்பன், கோபி போன்றவர்களை தேடுவதாகவும், அவர்கள் தப்பிவிட்டார்கள் என்றும் பல கட்டுக்கதைகளை இலங்கை அரசு திட்டமிட்டு களமிறக்கியது. இறுதியில் அவர்களை பாரிய இராணுவ நடவடிக்கையூடாக சுட்டுக்கொன்றதாக , இலங்கை அரசு அறிவித்தது. இச்செய்திகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு , கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வப்போது நடைபெறும் இந்த சம்பவம் தொடர்பாக, முழுத் தகவல்களையும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு இலங்கை அரசு வழங்கிவந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தயாரித்த இந்த பயங்கரவாதிகள் தொடர்பான அறிக்கை, நேற்றைய தினம்(ஏப்பிரல் 30) அமெரிக்க செனட் சபை முன் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை தொடர்பாக நீண்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில் புலிகள் மீள இணைவதாகவும், இதனையிட்டு இலங்கை அரசு பெரும் கவலையில் உள்ளதாகவும் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசு எதனைக் குறிவைத்ததோ அது நடந்து முடிந்துள்ளது. அமெரிக்கா தடையை நீடிக்கும், அதேவேளை அமெரிக்காவை பின்பற்றி ஏனைய பல நாடுகளும் தடையை நீடிக்கும். இதுவே நடந்து முடிந்துள்ளது. இதனை தவிர , மேலும் பல இரகசிய விடையங்களை, இந்த அறிக்கை அம்பலப்படுத்தியும் உள்ளது. இலங்கை அரசுக்கு 2013ம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய பயிற்சி தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது இவ்வாறு இருக்க, அமெரிக்காவால் வருடந்தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கைய, குறிவைத்தே 3 தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது இலங்கை- அமெரிக்க கூட்டு சதியா ? என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடைசெய்வதன் மூலம், தமிழர்களின் நியாயமான போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் உட்பட பல நாடுகள் நசுக்க முனைகிறது என்பது தான் அவ்விடையம் ஆகும்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6769

Geen opmerkingen:

Een reactie posten