உயிர் அச்சுறுத்தல் “TNA” மாநகர சபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு
படையினரின் சீருடையை ஒத்த உடையணிந்த இனம் தெரியாத 4 பேர் தன்னுடைய வீட்டுக்கு வந்து பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அச்சுறுத்தியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
என் மனைவி மற்றும் அக்காவிடம் ஜெயக்குமார் இருக்கின்றாரா என வினவியுள்ளனர். நான் வந்தவுடன் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சனிக்கிழமை காலை கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கபாரை சந்தித்து என்னை அழைத்தது வருமாறு பொலிஸாரை அனுப்பியிருந்தீர்களா எனக் கேட்டபோது உங்களுக்கு எதிராக எந்தவிதமான முறைப்பாடும் இல்லை எனவும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் அகதி முகாம் வீடு இடிந்ததில் இலங்கை சிறுமி பலி
தமிழகம், மேலூர், திருவாதவூரிலுள்ள அகதி முகாம் வீடொன்று இடிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். அத்துடன், அவரது இரு சகோதரர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடை குறித்துத் தெரியாது! ஆனால் மே 18 கவனத்தில் ஐ.நா
வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது டுஜூரைக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten