தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 mei 2014

மோடியின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணிக்கும் தமிழக எம்.பிக்கள் !

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணிக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்கேற்பது உறுதி என்பதால் தமிழகத்தில் அதிமுகவின் 37 நாடளுமன்ற உறுப்பினர்கள், பாமகவின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என 38 எம்.பிக்களும் அந்த விழாவை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நரேந்திர மோடி எதிர்வரும் 26 ஆம் திகதி டெல்லியில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
அந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கிறார்.
ஆனால் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஷவை அழைக்கவே கூடாது என்று தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக, பாமக ஆகியவையும் ராஜபக்ஷவை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் பாஜக சார்பில் வென்ற ஒரு எம்.பி.யான பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyFRXLZlt4.html

Geen opmerkingen:

Een reactie posten