இதேவேளை புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை, மாலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் உணர்வாளர் வைகோ அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தான் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை நிச்சயம் உறுதிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார் என்ற செய்திகள் டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழர்கள், என்ற சொற்பதத்தை விடுத்து, அவர் ஈழத் தமிழர்கள் என்ற சொற்பதத்தைப் பாவித்துள்ளமை, தமிழர்கள் மத்தியில் சிறிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர இந்துசமய பக்தரான நரேந்திர மோடிக்கு, இந்து ஆலயங்களில் யாராவது கை வைத்தால் பிடிக்காது. ஈழத்தில் இந்து ஆலயங்களை, பெளத்த பிக்குகள் நாசம் செய்வது தொடர்பான அறிக்கையை, தமிழ் அமைப்புகள் தயாரித்து அதனை மோடிக்கு அனுப்பினால், நிச்சயம் அவர் கவனம் ஈழத் தமிழர்கள் மேல் திரும்பும் .இதில் எந்த ஐயமும் இல்லை எனலாம்
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6861
Geen opmerkingen:
Een reactie posten