[ செவ்வாய்க்கிழமை, 13 மே 2014, 12:36.24 AM GMT ]
தமது நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக நாடு திரும்ப முடியாது என தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
சில நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகளின் இந்த நடவடிக்கை, இளைஞர் விவகார அமைச்சுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா, உகண்டா மற்றும் கிரிபானி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 06 பேர் இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.
நாடுகளில் நிலவிரும் பிரச்சினைகள், இன, மத முரண்பாடுகள் போன்ற காரணிகளினால் மீளவும் நாடு திரும்ப முடியாது என தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, நாடு திரும்ப முடியாது எனவும் இலங்கையில் தங்க அனுமதிக்குமாறும் கோரிய இருவரை, பாதுகாப்புத் தரப்பினர் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வீசா காலம் பூர்த்தியானதன் பின்னர் எவரும் நாட்டில் தங்க முடியாது எனவும் அவர்கள் நாடு கடத்தப்படுவர் எனவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளா சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசியல் தஞ்சம் கோரியவர்கள் எதிர்வரும் நாட்களில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
குற்றவியல் விவகாரம் தொடர்பில் இலங்கை- சீனாவுக்கிடையில் ஒப்பந்தம்
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 05:00.55 PM GMT ]
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து கடந்த 6ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் இரு தரப்பிற்கும் இடையில் சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது குற்றவியல் விவகாரங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த உடன்படிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten