தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 maart 2014

மாவை MP தொடர்பில் அவரது சகாவின் குற்றச்சாட்டிற்கு JVPNEWS இணையத்தின் செய்திக்கு பதில்!

பதிவு அஞ்சல் யாழ்ப்பாணம்
24.02.2014
திரு.க.கௌரிகாந்தன்
நவாலி
மானிப்பாய்
நண்பா!உனக்கு ஒரு இதயமிருந்தால் உன்னையே நீ கேட்டுப்பார்!
தங்களால் 16.01.2014 திகதியிட்டு அனுப்பிய பதிவுஅஞ்சல்14.12.2014 அன்றுதான் நேரில் பார்க்க முடிந்தது. 12.02.2014ந்நாள் நான் இலண்டனிலிருந்து வந்த பொழுது கனடாவிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய நண்பர் ஒருவர் இணையத்தளத்தில் வந்ததொரு தங்கள் கடிதச் செய்தியைப் பாருங்கள் என்று சொன்னார்.நம்ப முடியவில்லை. யாழ்ப்பாணம் வந்ததும் தங்களின் கடிதத்தைப் பார்த்ததும் தங்கள் கடிதந்தான் என்று தெரிந்தது. கதைக்குப் பதிலெழுத உடன் நேரமிருக்கவில்லை
“கதை கட்ட ஒருவனிருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு” என்ற ஒரு கவிதை வரிதான் நினைவுக்கு வந்தது.
அதைவிட “JVPNEWS” என்ற இணையத்தளத்தில் “மாவையை சிறையில் அடைக்கத் தயாராகும் புளொட்-கோத்தா அணி” என்ற தலைப்பில் வந்த செய்தியைப் பார்த்த பொழுது யேசுவைக்காட்டிக் கொடுக்க அவர் சபையிலேயே ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் நானென்ன “ஒரு சாமானியன்” தானே என்று இத்தனை நாளும் என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
1. உங்கள் கடிதத்தில், 2010ஆம் ஆண்டு மானிப்பாய்க்கிளை மீள ஆரம்பிக்கப்பட்ட பொழுது அக்கிளையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி தெரிவு செய்யப்பட்டதன் பின்னும் தேர்தல் காலங்களிலும் நீங்கள் அழைத்தபொழுதெல்லாம் உங்களுடன் கூட்டங்களுக்கு வந்து அளவளாவியும் இகூட்டங்களில் பேசியும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கு முன்பெல்லாம் மானிப்பாய்; வருகின்றேன் என்றால் நீங்களும்இசிவகுமாரும்இசூரியும் மருதடிப்பிள்ளையார் கோவிலடியில் நின்று அழைத்துச் சென்று பிள்ளையாருக்கு பூஜை செய்துஇபிரசாதம் பங்கிட்டுத் தானே அடுத்த வேலைக்குச் செல்வோம். நீங்கள் கனடாவில் தலைமறைவாகி இரட்டைக்குடியுரிமையில் இலங்கை வந்தது மருதடிப்பிள்ளையாரின் நிர்வாகத்தில் இடம்பிடிக்கத்தானே போராடி அந்த நிர்வாகத்துடன் பிளவுபட்டு வெளியேற்றப்பட்டு நின்றதால் வேதனைப்பட்டோமே தவிர கட்சியின் தலைவராக வந்ததற்காக நானேன் வேதனைப்படவேண்டும். ஒருநாளும் அப்படி வேதனையிருக்கவில்லையே. அது உங்கள் கற்பனை. உள்ளுராட்சித் தேர்தலில் நீங்கள் கூடிய விருப்பு வாக்கு பெற்றிருந்தாலோ அல்லது வெற்றி பெற்றவர்கள் ஒன்றுபட்டு உங்களைத் தெரிந்திருந்தாலோ, நீங்கள் பிரதேசபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பீர்கள். இந்தக் கதைக்கும் இடமிருக்காது. 22.11.2013 வரை மானிப்பாய் கிளையின் தலைவராக இருந்த பொழுதுதான் வந்துதிரு.கனகசபாபதிஇ திரு. குலநாயகமும் கூட இருந்த நேரத்தில் 2011ல் இருக்கலாம் யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவு வரை மருதடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தை மாற்ற வாதாடினீர்கள் “நான் அதற்கு உடந்தையாக மாட்டேன்”; என்ற பொழுது நீங்கள் வெளியேறிச் சென்ற பொழுதும் அரச அதிபரைச் சந்தித்துப் பேச உங்களுக்கு ஒழுங்கு செய்துவிட்டதை நினைவிருக்கிறதா? பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கோவில் நிர்வாகத்தைக்கலைக்கத் தலையிடமாட்டேன் என்பதிலிருந்துதானே பிரச்சினை வளர்ந்தது.
2
2. அடுத்தது 2011ல் அறிவிக்கப்பட்ட பிரதேச சபைத்தேர்தலில் ஆறாவது ஐந்தாவது இடத்தில் வந்த தங்களைத் “தலைவராக” நியமிக்க வேண்டுமென்பதை நாம் ஏற்கவில்லை என்பதுதானே தங்களால் வெளியிடப்பட்ட கதையின் மூலப்;பொருள.;; அதனால்தான் “;24.01.2014ல் வெளியிட்ட கடிதமும் உங்கள் சதி நடவடிக்கையும்மென “ஜே.வி.பி.நீயுஸ்” மூலம் அம்பலத்துக்கு வந்த திட்டங்களும்”; உண்மையைச் சொல்லுங்கள் நண்பா! அப்படி எடுத்துக்கொண்டால் இத்தனை பதவி வெறிஇ “மாவையை சிறையில் அடைக்கத் தயாராகும் புளொட்-கோத்தா” என்ற உங்கள் திட்டம் வரை அம்பலத்துக்கு வந்துவிட்டதென்ற பொழுதுதான் வேதனை. நினைத்துப் பார்இ நான் மாணவனாக இருந்த பொழுதுமுதல் அரசின் நாலாம் மாடி விசாரனைஇ நீண்ட காலம் இலங்கை சிறைகளில்; சித்திரவதைஇ இராணுவ முகாம்களில் சாகடிக்கப்பட்டு விட்டோம் என்ற நிலைமைகள்; எத்தனை ஆண்டுகள் வலராறு. உன் கடிதத்தை தினமுரசு ஏட்டில் மகிழ்ச்சியோடு வெளியிட்டவர்களால்,29.11.2001ல் ஊர்காவற்துறைக்குச் சென்றிருந்த போது தம்பாட்டியில் தாக்கப்பட்டு நாம் இறந்து விட்டோம் என்றும் இருபது பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளைக் ;கேள்விப்படவில்லையா நண்பா. இப்பபொழுதுதான் உனது கூட்டு எது என்று தெரிந்தது. இப்பொழுதும் அந்த வழக்கு ஆவணம் இருக்கிறது. யேசுவை ஒரு முறைதான் சிலுவையில் அறைந்தார்கள் நாங்கள்; எத்தனை முறை சிங்களச் சிறைகளிலும் நம் தமிழர் பிரதேசங்களிலும் சித்திரவதைப்பட்டு உயிர்போய் மீண்டிருக்கின்றோம். நீங்கள்இ உங்கள் கூட்டத்தினரும் என்னை மீண்டும் சிலுவையில் அறைகிறீர்கள். அமிர் அண்ணர் கொல்லப்பட்டபொழுது அவ்விடத்தில் காயப்பட்டு மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டிருந்த திரு.சிவசிதம்பரம் அவர்கள் ;சொன்னவைகள் உனது கடிதத்தில் மறைக்கப்பட்டுளள்து. 1980களில் முதலில் அமிர் அண்ணரை கொலை செய்ய முடிவெடுத்தவர்கள் யார் அதைத் தடுத்த தலைவரைக் கொன்றுவிட்டார்கள். அது யார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள?;
3. மானிப்பாய் பிரதேச சபைக்கு ஒரு உறுப்பினராய்த் தெரிவு செய்யப்பட்டவர் ஒரு பல்கலைக்கழக மாணவன்இ அதி கூடிய வாக்குகளைப் பெற்றவன். அவரை ஜனநாயக முறைப்படி தலைவராக நியமித்தோம். வடக்கிலிருந்து கிழக்குவரை நாம் வெற்றி பெற்ற 90மூ உள்ளுராட்சி சபைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் ஏற்றுக் கொண்ட முடிவின்படி, “கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் தலைவராக தெரிவு பெறுவதற்கு முன்னுரிமை பெற்றவராவர். அல்லது முன்னுரிமை பெற்றவர் உட்பட வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இணக்கப்பட்டு வேறொருவரை தெரிவு செய்தால் இ கட்சியின் பொதுச் செயலாளர் அவரை சபையின் தலைவராகத் தெரிவு செய்து தேர்தல் ஆணையகத்துக்கு அறிவித்துத் தலைவராக்கலாம்” என்பதுதான் நாம் பெற்ற வெற்றியின் ஒரு முக்கிய அம்சம், காரணம். நண்பா உன்னைத்தவிர எல்லோரும் இத் தீர்வை ஏற்றுக் கொண்டார்கள் அல்லவா! உங்களைத் தலைவராக நியமிக்கவில்லை என்பதற்காக அந்த பல்கலைக்கழக மாணவனை தலைவனாக செயல்படுவதற்கு எதிராக பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் அன்றிலிருந்து அச்சபையை செயலிழக்கச் செய்து வருகிறீர்கள். “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஒரு பழமொழி. அந்த மாணவத் தலைவன்,சபையின் தலைவர் கௌரவமாக விலகி விட்டார். விலக வைத்தீர்கள். அவர் மீது நீங்கள் சொல்லும் குற்றங்களிருந்தால் ஒரு விடயமாக விசாரிக்கத்தானே பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் ஐவர் நியமிக்கப்பட்டனர்.
4. உங்கள் கடிதத்தில் நீங்கள் வீணாக ஒரு கிருத்தவப் பாதிரியாரின் பெயரை எழுதி கெடுத்திருக்கிறீர்கள். உண்மையென்ன? நீங்கள் உங்களைத் தலைவராக்கும்படி உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையிலீடுபட்ட பொழுதுதான் மூன்று கிருத்துவப் பாதிரியார்கள் உட்பட மருதடிப்பிள்ளையார் கோவில் நிர்வாகத்திலிருந்தோரும், இளம் பல்கலைக்கழக சமூகத்தோரும் ஜெபநேசனை மாற்றப் போகிறீர்களா என்று கேள்விஎழுப்பினார்கள் நான் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். உங்களை நியமிக்க
3
எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
4.(அ)பளையிலும், பூநகரியிலும் எங்கள் முதல் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் திரு.ஆனந்தசங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு வெற்றி பெற்றவர்கள் ஒன்றுபட்டு எடுத்த தீர்மானம,; திரு.ஆனந்த சங்கரியினால் தரப்பட்டது.அவ்வாறே பொதுச் செயலாளா,; தலைவர்களை நியமித்தார் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை ஏன் மறைக்க வேண்டும்.
என்னைப் பற்றி அதிகம் பேசாத நான் ஒரு வார்த்தை சொல்கிறேன்!
5.(அ) 1977ல் தந்தை செல்வா மறைந்தபின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளைகள் என்னை அந்தத் தொகுதிக்கு வே;ட்பாளராக நிறுத்தினர். அமிர் அண்ணரும் சிவாஅண்ணரும் அப்படித்தான் உடன் கூறினார்கள். நான் வேட்பாளராக நிற்க விரும்பவில்லை. எனக்கு வேறு பணிகள் இருக்கிறது என்று அமிர் அண்ணரிடம் கூறிவிட்டேன். காங்கிரஸ் தலைவர்களும் தமிழரசுத் தலைவர்களும் தொகுதிப் பங்கீட்டில் முரண்பட்ட போது அமிர் அண்ணரிடம் நான் கூறியதென்ன? நீங்கள் காங்கேசன்துறைக்கு வாருங்கள், காங்கிரஸ் வெற்றி பெற்ற மூன்று இடங்களை அவர்களுக்குக் கொடுப்பதோடு திரு.குமார்பொன்னம்பலத்தையும் எடுத்துக்கொள்ளுங்களென்பதுதான். தீர்வு ஏற்பட உதவினேன்..காங்கேசன்துறைக்கு வேட்பாளராக வந்த அமிர் அண்ணர் எனக்கும,; செனட்டர் நடராசாவுக்கும் நன்றி தெரிவித்து லீலா அச்சகத்தில் இருபத்தையாயிரம் துண்டுப்பிரசுரங்கள் நாலு பக்கத்தில் அச்சிட்டு வெளியிட்டதை உனக்கு எங்கே தெரியப் போகிறது! அங்கிருந்துதான் எதிர்கட்சி முதல்வரானார் அமிர் அண்ணர். தந்தைக்குப் பின் தலைவரானார்.
(ஆ)1972ல் அரசியலமைப்புக்கெதிராக அன்று த.வி.கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பதவி விலக வேண்டுமென மிகப் பெரிய போராட்டம் குறிப்பாக இளைஞர் மத்தியில் தொடர்ந்து நடைபெற்றது.த.வி.கூட்டணிப் பொதுச்சபைக் கூட்டம் திருநெல்வேலி நீதிபதி வீட்டில் நடந்தது. தந்தை செல்வா மட்டும் பதவியைத் துறந்தால் போதும் என்று நான் பிரேரித்தேன். திரு.வீ.என்.நவரத்தினம் ஆமோதித்தார். சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பின் மகாவளவில் இறுதி செய்யப்பட்டது. இடைத் தேர்தல் வந்தது2½ ஆண்டுகளின் பின் வந்த தேர்தலில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டது. 09.03.1973ல் நான் கைது செய்யப்பட்டேன். தேர்தலின் போதும் அப்பொழுது நான் சிறைக்குள்தானிருந்தேன். இளைஞர் போராட்டம் வேறு திசையில் சென்றது. அமிர் அண்ணன் தலைமையைப் பலப்படுத்தி 1980களில் உகந்தையிலிருந்து பருத்தித்துறை வரை தொடர் கிராம யாத்திரை நடந்தது. அதற்கான பிரேரனையைக் கொண்டு வந்தேன். தமிழ்ப் பிரதேசமெங்கும் அதற்கான ஒழுங்குகள் செய்தோம்.
(இ)2013ல்; வடக்கு மாகாணசபைத் தேர்தலில் என்ன நடந்தது. மாவை.சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக இருக்கவேண்டுமென்று ஏகோபித்த ஒரு நிலை. நான் அப் பதவிக்குச் செல்ல விரும்பியிருக்கவில்லை. ஒரு சிறந்த ஒருவர் வேட்பாளராக வந்தால் அதுதான் என் முதல் தெரிவு என்றேன்.சிறந்த ஒரு வேட்பாளரை நாங்கள் ஒன்றுபட்டு தேர்ந்தெடுத்துப் பெரு வெற்றியைப் பெற்றோம். நீங்களோ உங்கள் பிரதேச சபைத் தலைவர் பதவிக்குப் போராடுகிறீர்கள,; பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கிறீர்கள் . என்னை அனைவரும் போற்றினார்கள். அதனால் பெருமிதப்படவில்லை.. கோப்பாயில் நடைபெற்ற அமரர் வன்னியசிங்கம் கூட்டத்தில் உங்களைத் துரோகி என்றதாக ஒரு புரளி. என் வாழ்வில் ஒரு நாளும் அவ்வார்த்தையைப் பாவித்ததில்லை. அங்கு உங்களைப் பேச ஒரு தேவையுமில்லை .இதுவும் ஒரு கட்டுக்கதை. அங்கிருந்தவர்கள் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் உன் கதையை ஏற்கவில்லை.
நீங்கள் மானிப்பாய் பிரதேசத் தலைவராக நியமிக்கப்படவில்லை என்பதற்காக இரண்டரை ஆண்டுகளாக அந்த சபையைச் செயற்படவிடாமல் ஒரு பல்கலைக்கழக மாணவனை வளர்த்தெடுக்க விடாமல் பதவி விலக வைத்தீர்கள். அந்த இளைஞன் ஜெபநேசன் எவ்வளவு
4
உயர்ந்து நிற்கிறான். உங்களது நடவடிக்கையால் மக்கள,; பத்திரிகைகள் எவ்வளவு விமர்சனங்களைச் செய்தார்கள். மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயற்பட்டீர்கள.;
எத்தனை தரம் பிரதேசசபையில் எம் கட்சி அலுவலகத்தில் பிரதேச சபையை ஒன்றுபட சீராக நடத்தும்படி பேசியிருக்கிறோம். எங்கள் அலுவலகத்தில் ஒருமுறை கேட்டீர்கள் தலைவராக உங்களை நியமிக்கா விட்;டால் சாவற்காடு பரமகுருவை நியமியுங்கள் என்று கேட்கவில்லையா? அதனுடைய அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் உங்களை நியமிக்க வேண்டும் என்ற நினைவூட்டல் என்பதுதானே. ஜனநாயகம் பற்றி புதிய பாடம் படிக்கிறீர்கள் அதி கூடிய வாக்குகளைப் பெற்றவன் ஒரு இளைஞன் எங்கள் கட்சியில் சேர்ந்தவன் ஒரு பல்கலைக்கழக மாணவன் ஏன் தலைவராக வரக்கூடாது. இ 40மூ இளைஞர்கள் போட்டியிட வேண்டுமென்று தேர்தல் சட்டம் சொல்கிறபோது போட்டியிட்ட அந்த இளைஞன் தலைவராக ஜனநாயக முறைப்படி ஏன் நியமனம் பெறமுடியாது? நீங்கள் அதை எதிர்த்தால் அது என்ன ஜனநாயகம்? அது முழு பிற்போக்குத் தனம். அப்படிப்பட்டவர்கள் தமிழரசு கட்சியின் பெயரை சொல்லிப் பதவிக்கு வரத் தகுதியற்றவர்களே! பிரதேச சபையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு நீங்கள் வரவில்லை. மேடையில் இருந்தவர்களிடம் கேட்டிருக்கிறேன்.எங்கே கௌரி என்று. அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரைக் காணவில்லை என்றார்கள.; இது பற்றி உங்களிடம் கேட்டிருக்கிறேன்.
மானிப்பாய்க் கிளையை கூட்டி மானிப்பாய் பிரதேச சபையின் பிரச்சினைகளைத் தீர்க்கும்படி கேட்டிருக்கிறேன்இ அதன் செயலாளர் கஜதீபனைப் பல தடவைகள் கேட்டிருக்கிறேன்இ நடைபெறவில்லை. மானிப்பாய்க் கிளையை சீராக நடத்த உதவாத தமிழரசுக்கிளையால் என்ன பயன்? மானிப்பாய் பிரதேச சபை பதவியேற்பு விழாவிற்கு வராமல் விட்டு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல எல்லோரினதும் பதவிப் பிரமாணத்திலும் பங்கு கொள்ளாமல் தனியான சத்தியப்பிரமாணம் எடுத்ததையும் நினைவூட்டுகிறேன். மானிப்பாய் பிரதேச சபையின் பிரச்சனைகளைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தோற்றதனால் ஒழுக்காற்றுக் குழு ஒன்றை 2013 நடுப்பகுதியில் பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் நியமித்தோம். சபை நடவடிக்கைகளை திருத்திக் கொள்வதற்கு பேச்சு நடாத்தப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களாகிவிட்டது. ஒரு அறிக்கையோ நடவடிக்கையோ இல்லை. .தங்களின் கூட்டுப் பொறுப்பற்ற தன்னிச்சையான மூர்க்கத்தனமான செயற்பாடுகள் இன்றும் தொடர்கிறது.
வடக்குமாகாணசபைத் தேர்தலில் உள்ளுராட்சி மன்றங்களை முழுமையாக ஈடுபடுத்தி பெரும் வெற்றியை ஈட்டும் பொருட்டு உள்ளுராட்சி மன்றத் தலைவர்களையும்இ உறுப்பினர்களையும் அழைத்துப்பேசி அவரவர் பிரதேச சபைகளிலும் தலைவர்கள் தலைமைதாங்கி தேர்தல் வேலைகளைச் செய்விக்கத் தீர்மானித்தோம்இ எல்லாச் சபைகளிலும் அவ்வாறு நடந்த பொழுது மானிப்பாயில் மட்டும் அதன் தலைவர் ஜெபநேசன் தலைமைக்குப் பதிலாக கௌரிகாந்தன் தலைமையில் கூட்டம் நடத்தவேண்டும் என்று குழப்பத்தை ஏற்படுத்தினீர்கள். திரு.ஜெபநேசன் தான் தலைமை தாங்கத் தேவையில்லாதுவிட்டால் பொதுவான ஒருவரைப் போட்டுக் கூட்டத்தை நடத்தவும் இணங்கியிருந்தார்.; அதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் கூட்டமைப்பின் தலைமையே அந்தக் கூட்டத்தை நடாத்தும் என்று மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. அதையும் எதிர்த்து நீங்களும் உங்களோடு உள்ளவர்களும் நடந்து கொண்டீர்கள். புறக்கணித்தீர்கள். அக் கூட்டத்திற்கு வந்தவர்களைப் (பிரான் பற்று மகேந்திரன்); புறக்கணித்துப் பழிதீர்த்திருக்கிறீர்கள்.
திரு.கஜதீபனை ஒரு ஒழுங்கின்படி நாமே வேட்பாளராக நியமித்தோம். அவரை நியமித்ததில் ஒரு துளிப் பங்கும் உங்களுக்கில்லை. கஜதீபனுக்கு ஐந்து இலட்சம் கொடுத்தோம் என்பது இன்னுமொரு உண்மைக்கு மாறான கதை. காட்டிக் கொடுப்பு. தேர்தல் விதிமுறைக்கு உங்கள் பொய்க்கூற்றுக் கூட விரோதமானது. ஏனையோரிடமும் விரோதத்தை உண்டுபண்ணுவதாகும். அப்படிச் சொல்லிவிட்டு கஜதீபன்இ இளைஞனை வெற்றிபெறச் செய்தோம் என்பது ஜெபநேசனை வலிந்து வெளியேற்றியதை மறைக்கவேயாகும்;. கஜதீபனை வெல்லவைத்தோம் என்பது தனது
5
பதவி மோகத்தை மறைக்க எடுத்த முயற்சி ஆகும்.நீங்கள் தேர்தலில் வேலை செய்ததை ஒரு பொழுதும் நான் தப்பாகச் சொன்னதில்லை.
எனது சகோதரி பற்றியும் அந்தக் கதையில் சொல்லப்படுகிறது. அவர்களெல்லாம் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிக்காக உழைத்தவர்கள். அவரது கணவரின் சகோதரன் இலண்டனில் இருந்து வந்து ஒரு பண்ணை ஒன்றை மானிப்பாய் பிரதேசத்தில் போடுவதற்கு முதலிட வந்தார்.
அதற்கான காணியை வாங்கினார். பல இலட்சம் முதலிடத் திட்மிட்டிருந்தது. அதற்காக அந்தக் காணியை மானிப்பாய் பிரதேச சபையில் பதிய கௌரிகாந்தன் தடையாக இருக்கிறார் என்ற பொழுது பிரதேச சபைத் தலைவரிடம் கேட்டேன்இ 100க்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புஇ அபிவிருத்தி ஏற்படும்இ உங்களுக்கு வருமானம் கிடைக்குமெனத்தான் கேட்டோம்இ ஏதும் கையூட்டுப்பற்றிப் பேசினோமா? தவறாகப் பதியுமாறு கேட்டோமா? அதனையும் எதிர்த்தீர்கள். இப்பொழுது பளைப் பிரதேசத்தில் 100க்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று பெரிய முதலீட்டில் அந்தப் பண்ணை நடைபெறுகிறது. அவரது பெயரையும் உனது கதைக்கு இழுத்திருக்கிறீர்கள்! அந்தத் திட்டத்தை அவர்கள் பளைப் பிரதேசத்தில் நிறைவேற்றினார்கள்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிக்காக கஜதீபனை, சித்தார்த்தனை, நீதியரசரை கொண்டுவந்து மாகாண சபைக்குப் பெரிய வெற்றிக்கு உழைத்ததாகச் சொல்லி அதனால் மானிப்பாய் கிளையைக் நான் கலைத்ததாக இன்னொரு பொய்யை புரளியை அவிழ்த்துவிட்டிருக்கிறீர்கள். முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும.;; தேர்தலில் நீங்கள் செய்த வேலைக்காக கிளையைக் கலைத்ததாகச் சொல்வது முற்றிலும் ஊரை ஏமாற்றுவதாகும். உங்கள் தன்னிச்சையான அகங்கார முயற்சிகள் தமிழரசுக் கட்சியினதும் தேசியக் கூட்டமைப்பினதும் கூட்டுத் தீர்மானங்களுக்கு எதிராக, மாறாக, “உங்களைத் தலைவராக நியமிக்கவில்லை” என்பதற்காக ஜனநாயக விரோதமாக மானிப்பாய் பிரதேச சபையை செயலிழக்கச் செய்து வந்த தங்களின் நடவடிக்கைகளுக்குத் தமிழரசுக் கிளையைப் பயன்படுத்தக் கூடாது என்பதால் தான் இரண்டரை வருடங்களின் பின் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பதில் அளிக்காமல் வேறுகதைகளைக் கூறுகிறீர்கள். கௌரிகாந்தன் கதையின் “கிளைமாக்ஸ்’; ஒரு பெரும் துன்பியலை தனது சொந்த நலனுக்காக இ பிரதேச சபைத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பயன்படுத்தியதுதான் பெரும் கேடாக இருக்கிறது.
1989 ஆடி 13 ஆம் நாளின் பின் 23 ஆண்டுகளாக அண்ணன் தம்பி; நண்பனாக என்றும் பழகியவர் என்று நினைத்த ஒருவன் 16-01-2014ல் தான் ஞானம் பெற்று ஒரு கதையை வெளியிட்டு வெற்றி விழாவை தினமுரசு பத்திரிகையிலும் வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறார்;.ஆனால் “ஜே.வி.பி.நீயூஸ”; இணையத்தளம் எனக்கெதிரான ஒரு சதித் திட்டம் என்கிறது. கோத்தபயாவிடம் கைகோர்த்து குகைக்குள்ளிருந்த குள்ள நரிகளின் திட்டத்தால் மாவை சிறைக்குள் தள்ளப்படுவார். நம்ப முடியவில்லையல்ல நம்பாமலும் விடமுடியவில்லை!
1983ல் அமிர் அண்ணன் இந்தியா சென்றிருந்த காலம் நான் நீண்ட காலம் சிறைவாழ்விலிருந்து மீண்டு வந்த பின் 1983 மன்னார் மாநாட்டில் பங்கு கொண்டேன். நாட்டில் கலவரம் இடை நடுவில் அம்மாநாடு கைவிடப்பட்டு அமிர் அண்ணர் குடும்பத்துடன் நானும் யாழ்ப்பாணம் வந்துவிட்ட காலம்1983. அவர் மகன் இந்தியாவிலிருந்து தனது மைத்துனரிடம் ஒரு கடிதம் எனக்கு அனுப்பினார். அந்தக் கடிதம் மன்னாரில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட போது என்னையும் இன்னும் இருவரையும் கைது செய்;து ஆனையிறவு இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்று என்னைச் சித்திரைவதை செய்து செத்துவிட்டேன் என்றுதான் வீசி விட்டார்கள். அப்பொழுதும் உயிர் பிழைத்து விட்டோம். அந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில,; அப்பா தம்பியை “உவ்விடம்’ சந்தித்தார் என்பதுதான். உவ்விடம் என்பதை மொழி பெயர்த்தவன் “உங்களுடன்” என்று எழுதியதன் விளைவு. தம்பி என்பது பிரபாகரன.; “நான் விடுதலை பெற்று உயிருடன் வராது விட்டால் எங்கள் மீது தானே பழி விழுந்திருக்குமென்று அமிர் அண்ணன் குடும்பத்தினர்
6
கண்ணீருடன் கலங்கிச் சொன்னவர்கள்”; குரல் இன்னும் இதயத்துக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்பது உனக்குப் புரியாது! அமிர் அண்ணரை முன்பும் பலமுறை புலித்தலைவர்கள் சந்தித்திருக்கிறார்கள.; உமது கடிதத்தில் “அமிர் அண்ணனை கொலை செய்யப்படுவதற்கு முன் கொலையாளிகளிடம் நீங்கள் ஆயுதங்களைப் பறித்ததென்பதோ நான் அதைக் கொடுத்து அனுப்பச் சொன்னதென்பதோ முற்றுமுழுதான பொய். நான் அவர்கள் வந்ததைப் பார்க்கவுமில்லை. அதற்கு வெளியால் நிற்கவுமில்லை.
அமிர் அண்ணன் பாதுகாவலர் சொன்னதாக சொல்வது முழுப் பொய். அவர்கள் உன்னால் வெளியிடப்பட்ட செய்திமுழுப்பொய் என்று அமிர்அண்ணர் குடும்பத்தில் ஒருவருக்கும் என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள்.
திரு.சிவசித்தம்பரத்தை உமது கதையில் மறைத்துவிட்டதேன். திரு.யோகேஸ்வரன்இ திரு.அமிர் அண்ணன்இ திரு.சிவசிதம்பரம் அவர்கள் சந்திக்க முடிவெடுத்தே அச் சந்திப்பு இடம் பெற்றது. அன்று மாலை அமிர் அண்ணன் மேல் மாடிக்கு செல்லும் வேளையில்தான் என்னிடம் சொன்னார் “சந்திப்பதற்கு வந்திருக்கிறார்கள். நான் பத்துஇபதினைந்து நிமிடத்தில் “தாஜ் கோட்டலில் “இந்திய இராஜ தந்திரியின் விருந்துக்குச் செல்லவேண்டும், அப்பொழுது நீங்கள் சென்று பேசுங்கள”; என்று சொன்னதுதான் உண்மை. மேல் மாடியில் பேச்சு நடந்த பொழுது தமிழ் பாதுகாவலர் இடையில் வந்து என்னிடம் சொல்லியது என்னவென்றால,; “நாங்கள் வந்தவர்களைச் சோதிக்க முற்பட்டபோது திரு.யோகேஸ்வரன் சோதிக்க வேண்டாம்”; என்று மேல்மாடியில் நின்று கூப்பிட்டு அழைத்துச் சென்றுவிட்டார்” என்பதுதான். இது அமிர்அண்ணர் குடும்பத்திற்கு நன்றாகத் தெரியும். எந்த மனச்சாட்சியுள்ள மனிதரும் அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதைச் சொல்லட்டும். சந்தித்து பேச்சு நடாத்த வந்தவர்களை நான் குழப்பி விபரீதம் நடக்க முயன்றேன் என்ற பழியை பின் சுமத்தியிருப்பார்கள். அன்றைய விடயம் அதன் உண்மை யாவரும் அறிந்த ஒரு விடயம.; “பொலிஸ்” உயர் மட்ட விசாரனையில் அமிர் அண்ணர் பாதுகாவலர்கள் திட்டமிட்டு கொடுத்த சாட்சியங்களும் அதுதான். சாட்சி சொன்னவர்கள் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் கௌரி முழுப் பொய் அளக்கிறார் என்று சொன்னால் உன் நோக்கம்தான் என்ன? அன்று முதல் இத்தனை ஆண்டுகளாக ஒரு பொழுதேனும் வேறுயாருமோ இந்தக் கேள்விகளை எழுப்பியிருக்கவில்லை. மானிப்பாய் பிரதேச சபைக்கு தலைவராக நியமிக்கவில்லை என்றதும் அவ்வாறு கதைகட்டிப் பழி சுமத்திக் காட்டிக் கொடுத்தும் பெருந் தலைவராகி விடலாம் என்று 23 ஆண்டுகளுக்குப் பின் எண்ணுவதா? இவர் ஜனாதிபதி பிரேமதாசாவை காப்பாற்ற முயற்சிக்கிறாரா அவர்களை, நீங்கள், இத் துன்பியல் நிகழ்ச்சியை உங்கள் நலனுக்காகவும் சதிக்காகவும், அந்தப் பாதுகாவலர்களை இழுப்பதுமுறையற்றது. நடத்தப்படவுள்ள விசாரனையில் இவை தெரிய வரும.; அன்றிலிருந்து உங்களால் இற்றைவரையோ அன்றோ எந்த முறைப்பாடோ சாட்சியமோ அளிக்கப்பட்டதையோ அச் சம்பவத்திலிருந்து16.01.2014ல் கட்டுக்கதை எழுதும் வரைக்குமோ எம்மில் யாரிடமும் பேசியுமிருக்கவில்லை. அதுபோலவே அமிர் அண்ணன் மலருக்கு நிதி அனுப்பியதை கனடாவிலிருந்து வந்த பின்தானும்; எப்போதாவது பேசியதுண்டா? கேட்டதுண்டா? இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கணக்குவிடுகிறீர்கள்!; இதில் உண்மை என்ன? பதிலாக அப்படுபாதகச் செயலுக்குப் பின் எனது அறையில் தங்கி உணவு தயாரித்து உண்டு என்னுடன் உதவியாக இருந்து அன்பாக என்று எத்தனை ஆண்டுகள் செயலாற்றி வந்திருக்கிறீர்கள். இதற்குள் திருமதி.மங்கையர்க்கரசியை இழுப்பதும் மிகப் பெரும் அபத்தமே. அமிர் அண்ணன் குடும்பத்துடன் இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதற்கான சதியே இதுவுமாகும். என்னுடன் தம்பி பகீரதன் (ரவி) சென்ற மாதமும், திருமதி மங்கையற்கரசி கொழும்பில் சென்ற ஆண்டிலும் சந்தித்துப் பழகி உணவருந்திச் சென்றார்களே! இலண்டனிலும்,கனடாவிலும் அவ்வாறே நிகழ்ந்தன.
1. அமிர் அண்ணன் கொலையுண்டதன்பின் அவர்கள் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில்,இலண்டனில், கனடாவில் அஞ்சலியுரை நிகழ்த்தியிருக்கின்றேன். கனடாவில் நான் உரையாற்றி முடிந்த பின் தம்பி ரவி “நன்றாகப் பேசினீர்கள்” என்று
7
சொன்னது நினைவிருக்கிறது. இவர்களே என்னைவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள்.அவர்கள் பல தடவைகள் இலண்டனில்,கொழும்பில் என்னையும்அழைத்துப் பேசி உணவருந்திச் சென்றிருக்கிறார்கள்.
2. 1989யூலை13ன் பின் அவர்கள் பூதவிடலுடன் ம்ட்டக்களப்பு திருமலை, யாழ்ப்பாணம் எல்லாவிடமும் சென்றிருக்கிறேன்.
7
3. 14.07.89 இரவு இந்தியத் தூதருடன், முதற் செயலாளருடன் தம்பி ரவியும் நானும் அமிர் அண்ணன் கொலையுண்ட மறுதினம் இரவு நீண்ட நேரம் பேசியிருந்தோம்.
4. பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசகர் பார்த்த சாரதி இருமுறை டெல்கியிருந்து பேசியிருந்தார் அதன் பின்,
5. அமிர் அண்ணரின் “அஸ்த்தி” இந்தியா கொண்டு செல்லப்பட்டு கங்கையில் கரைக்க ஒழுங்கு செய்யப்பட்டபொழுது நானும் அமிர் அண்ணன் குடும்பத்தினருடன் அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன். புதுடெல்லியில் அவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள,; பிரதமர் ராஜீவ்காந்தி,ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோரைச் சந்தித்த போது பார்த்தசாரதியுடனும் நானும் சென்று பேசியிருந்தேன.; அவரே எல்லா ஒழுங்குகளையும ;செய்தார்.
6. 1989 ஓகஸ்ட்,செப்ரம்பர் மாதங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களை அழைத்து அந்தக் கொழும்பு வீட்டிலேயே கூட்டங்கள் நடாத்தி அமிர் அண்ணரின் வெற்றிடத்துக்கு என்னை நியமித்தார்கள். நான் யாரிடமும் என்னையே நியமிக்கவேண்டுமென்று வற்புறுத்தவில்லை.திரு.ஆனந்தசங்கரி, திரு.தங்கத்துரை அவர்கள் என்னையே நியமிக்கவேண்டுமென்று கருதி இருந்தார்கள். திரு.இராஜேந்திரனும் நீங்களும் எவ்வளவு தூரம் என்னுடனேயே ஒரே அறையில் ஒரே கூட்டத்தில் இருந்து பணியாற்றியிருக்கிறோம்.
அவ்வாறே திரு.நீலன் திருச்செல்வம் கொலையுண்ட பின்னும் என்னையே அந்த வெற்றிடத்திற்கு நியமித்தார்கள்.அப்பொழுதெல்லாம் அமிர் அண்ணரிடம் ;பாதுகாவலர்களாக இருந்த சத்தியமூர்த்தி,இலட்சமணன் எல்லாம் எனக்கும் பாதுகாவலர்களாக இருந்திருக்கிறார்கள்.
உண்மையெல்லாம் இப்படியிருக்க நீங்கள் திட்டமிட்டுக் கட்டிய கதை இணையத்தளங்களிலும் தினமுரசு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.மானிப்பாய்க் கிளையைக் கலைத்த நியாயத்தை கட்சி மத்திய குழு முன் வைத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை கட்சி தலைமைக்கு அல்லது செயற்குழுவிற்கு அனுப்பியிருக்க வேண்டும்.இ.த.அ.கட்சி அமைப்பு விதி மற்றும் ஒழுக்கக் கோவை விதிகளின் படி நடக்கத்; தவறி விட்டீர்கள.; பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அது உண்மையோ பொய்யோ என்று விசாரிக்க இடமளிக்காமல் பாரதூரமான, உண்மைக்கு மாறான செய்திளை பகிரங்கமாக ஊடகங்களில் வரச் செய்திருக்கிறீர்கள்.
வெளிநாட்டில் தினக்கதிர் இணையத்தளத்திலும் உள்நாட்டில் தினமுரசு 27.01.2014 இதழிலும் “ஜே.வி.பி.நீயூஸ்” இணையத்தளத்திலும்” மாவையை சிறையில் அடைக்கத் தயாராகும்”புளொட்(Pடுழுவுநு)- கோத்தா அணி” எனும் தலைப்பில் வந்த சதித்திட்டம் தொடர்பான செய்தி இன்று வரை தங்களாலோ சம்பந்தப்பட்டவர்களாலோ மறுக்கப்படவில்லை. அது சரியென்று விட்டிருக்கிறீர்கள். இதுவரை அச்செய்திக்குப் பதிலளிக்காதது ஏன்? சதித் திட்டம் அம்பலமாகினாலும் பாதுகாப்பு உண்டென்று நினைக்கிறீர்கள். நீண்டகாலக் கூட்டு எது என்பது தெரிந்துவிட்டது. விளைவு வெளிவந்திருக்கிறது.நான் அவதானமாகத்தான் இருக்க வேண்டும்.
மாவை.சோ.சேனாதிராசா,பா.உ
http://www.jvpnews.com/srilanka/62284.html

Geen opmerkingen:

Een reactie posten