கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் காலவரையறைக்கு அடிபணியாமல் உடனடியாக செயற்திறன்மிகு உள்நாட்டு விசாரணையொன்றை நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதனைக் கூறினர்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாவது;
உள்நாட்டு விசாரணையொன்றை விரைவில் நடத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகின்றோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் காலவரையறைக்கு அடிபணியாமல் அதனை நிறைவேற்ற முடியும்.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி பிரபாகரனுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி பிரபாகரன் உயிரிழந்தார்.
இந்த காலத்திற்குள் இடம்பெற்ற விடயங்களை மாத்திரமே தெளிவுபடுத்துமாறு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.
இவை அனைத்தும் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உள்நாட்டு விசாரணை அவசியமாகும். அதனைவிடுத்து தடையுத்தரவுகளுக்கு இடமளிக்க முடியாது.
ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டதாவது;
இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதாக இருந்தால், அல்லது மனித உரிமைகளை மீறுவதாக இருந்தால், இலங்கையில் மக்களுக்கு வாழ முடியாது என்றால் இம்முறை தேர்தலில் அவர்களுக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். ஐக்கிய நாடுகளை அல்ல முதலில் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkw5.html
Geen opmerkingen:
Een reactie posten