தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

புலிகளுக்கு உதவிய பிரதீபனுக்கு அமெரிக்கா 2 வருடம் சிறைத்தண்டனை வழங்கியது !

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்கா சென்றார் என்னும் குற்றச்சாட்டில் பிரதீபன் சிக்கினார். புலிகளுக்காக துப்பாக்கி வாங்கச் சென்ற இவருக்கு அமெரிக்க எ.பி.ஐ உளவு நிறுவனம் , விமான எதிர்பு ஏவுகணைகளையும் காட்டி, இதனையும் வாங்க விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளார்கள். தாம் ஆயுதம் வாங்க முனைந்த நபர்கள் அமெரிக்க உளவுப் பிரிவினர் என்று தெரியாமல் பிரதீபன் குழுவினர் சிக்கிக்கொண்டார்கள். இருப்பினும் பிரதீபன் தனது சொந்த நாடான கனடாவுக்கு திரும்பிவிட்டார். அமெரிக்க உளவு நிறுவனம் இவர்களை விட்டபாடாக இல்லை. கனடா அரசிடம் அவரை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து கனடா அரசு பிரதீபனை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது.

அங்கே தாம் சேகரித்த ஆதாரங்களை காட்டி , அமெரிக்க பொலிசார் வழக்கு தொடுத்தார்கள். குறைந்தது 15 வருடங்களாவது பிரதீபனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டது. தமது நாட்டில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து வாதிட்டது. ஆனால் புலிகள் அமெரிக்காவுக்கு எதிராக எதனையும் செய்யவில்லை என்றும், அமெரிக்க மண்ணிலோ இல்லை வேறு எந்த நாட்டிலும் புலிகள் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவில்லை என பிரதீபனின் வக்கீல் வாதிட்டார். இலங்கை அரசை ஒரு காலத்தில் கைக்குள் கொண்டுவரவே அமெரிக்கா புலிகள் இயக்கத்தை தடைசெய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதப் பிரதிவாதத்தை கேட்ட நீதிபதி, பிரதீபனுக்கு 2 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளார். அமெரிக்க நீதிபதிக்கே புரிந்துள்ள விடையம் சில தமிழர்களுக்கு இன்னும் புரியவில்லை. இன்றும் சிலர் அமெரிக்க புகழ் பாடி வருகிறார்கள். அமெரிக்கா புகழ் பாடும் சில தமிழர்கள், இலங்கை அரசின் அடிவருடிகளாகத் தான் இருப்பார்கள் என்பது தற்போது தெளிவாகப் புரிகிறது. இலங்கை அரசில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது மட்டுமே அமெரிக்க அரசின் நோக்கமாக உள்ளதே தவிர, அவர்கள் இலங்கை தமிழர்கள் விடையத்தில் அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது எல்லாம் பகல் வேஷம் என்பது அனைத்து தமிழர்களாலும் உணரப்பட்டுள்ளது.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6590

Geen opmerkingen:

Een reactie posten