கஜீபன் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில், இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமில் இருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி கட்டார் சென்றுவிட்டார். அதன் பின்னதாக அவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல புலிகளின் வெளிநாட்டு செயல்பாட்டாளர்களைச் சந்தித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்து கிளிநொச்சியில் தங்கி இருந்திருக்கிறார் என்று கூறியுள்ளது பொலிஸ் திணைக்களம். இந்த நிலையில் பொட்டு அம்மானின் கீழ் பயிற்சிபெற்றவர் எனக் கூறப்படும் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவரான 50 வயதுடைய சண்முகலிங்கம் சிவசங்கர் என்றழைக்கப்படும் ஜயகுமார் பாலேந்திரனை கிளிநொச்சி தர்மபுரத்தில் வைத்து பொலிசார் மடக்கிப் பிடிக்க முனைந்தவேளை அவரும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்ததாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் நம்புகிறார்கள். இதேவேளை சர்வதேசரீதியாக தொடரும் அழுத்தங்களில் இருந்து மீளவும், நெருக்கடிகளை திசைதிருப்பவுமே இப்படி பல தயாரிப்புகளும் கதைகளும் தொர்ந்து வெளிவரும் என, பாதுகாப்பு தரப்புக்கு நெருக்கமான முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6571
Geen opmerkingen:
Een reactie posten