தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த மேற்படி பெண் அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதன்போது வழியில் இவர்களை வழிமறித்த 3 பேர் குறித்த இளைஞனைத் தாக்கிவிட்டு ஒருவர் மாறி ஒருவராக குறித்த யுவதியினை யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்க அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியர்வர்களின் ஒருவரின் கைப்பையினை (பேர்ஸ்) கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரைப் தேடி வருவதாக தெரிவித்தனர்.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (08) மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/62278.html
Geen opmerkingen:
Een reactie posten