ஜெனீவா தீர்மானத்திற்கு, நாட்டு மக்கள் சிறந்த பதிலளிப்பர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகம் பற்றிய சிறந்த புரிதல் காணப்படுகின்றது. நாட்டு மக்கள் அறிவாற்றல் உடையவர்கள்.
எந்த நேரத்திலும் தாய் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். எனவே, இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டும்.
ஜெனீவா தீர்மானம் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சிலரினால் எடுக்கப்பட்டது. எனினும், இந்த நாட்டு மக்கள் இன்று சிறந்த தீர்ப்பை அளிப்பார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் இன்று வாக்களித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWit1.html
Geen opmerkingen:
Een reactie posten