அமெரிக்கப் பிரேரணை 11 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி! இலங்கை அரசு சங்கடத்தில் - டுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது. ஆனாலும் அந்தப் பிரேரணை படு தோல்வியடைந்துள்ளது. - 11 மேலதிக வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கைக் எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்துள்ளன.
இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியா காலை வாரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையமே !
இன்று ஐ.நாவில் நடைபெற்ற அமெரிக்க பிரேரணையில், இந்தியா காலைவாரும் என்பது அனைவரும் அறிந்த விடையமே. ஒன்றுக்கும் உதவாத அமெரிக்க பிரேரணைய ஆதரித்தால் தான் என்ன ? இல்லை ஆதரிக்க வில்லை என்றால் தான் என்ன ? சோனியா காந்தி இந்தியாவில், ஆட்சியில் இருக்கும் வரை அது தான் நடக்கும் என்பதனை தமிழர்கள் எப்போதோ புரிந்துகொண்டு விட்டார்கள். இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் ஒரு வழி பிறக்கும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது. அதேவேளை அமெரிக்காவின் இந்த தீர்மானம் நிறைவேறிவிட்டது என்று அமெரிக்காவை தலையில் தூக்கிவைத்து ஆடும் கும்பல், தமிழர்களை அடியோடு சேறில் புதைக்க பார்கிறார்கள் ! அதனையும் நாம் மனதில் கொள்ளவேண்டும் !
அமெரிக்காவின் நிலை என்ன என்பதனை அனைத்துத் தமிழர்களும் நன்றாக உணர்ந்துள்ளார்கள். அது என்னவென்றால் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம். தனது நீண்ட நாள் நண்பரான ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சி பீடத்தில் அமர்த்தவே அமெரிக்கா முனைகிறது. ரணில் ஐயாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதனை அறிந்தே, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை களமிறக்கியது அமெரிக்கா. ரணிலுடன் அமெரிக்கா கூட்டு வைத்திருந்ததை புலிகள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அமெரிக்கா தம்மை அழிக்க முற்படுகிறது என்ற விடையத்தை சு.ப.தமிழ்ச்செல்வன் தன்னோடு பழகிய பலருக்கு நேரடியாகச் சொல்லியும் உள்ளார். இதற்கு நானும் ஒரு சாட்சி. இதன் காரணமாகத் தான் அப்போது நடைபெற்ற தேர்தலை புலிகள் புறக்கணிக்கச் சொன்னார்கள். ஆனால் அமெரிக்க ஸ்துதி பாடும் கோஷ்டி இன்னும் அடங்கிய பாடாக இல்லை.
"மகிந்தர் மோதகம் என்றால், ரணில் கொழுக்கட்டை" இரண்டும் உருவத்தில் தான் வித்தியாசம். ஆனால் உள்ளே இருப்பதென்னவோ ஒன்று தான் ! அது சிங்கள இனவாதம் !. அமெரிக்கா நினைப்பதுபோல ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால், அது தமிழர்களை மிகவும் பாதிக்கும். ரணில் இலங்கை ஆட்சிபீடம் ஏறினால்... அமெரிக்கா இவை அனைத்தையும் குப்பைதொட்டியில் போட்டும் விடும். மேற்கு உலகத்திற்கு வளைந்து கொடுக்காமல் இருக்கும் மகிந்தர் , ஒருவேளை ஆட்சியில் இருந்தால்... இல்லையென்றால் இருக்கும் காலத்தில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதனை நாம் நிரூபிக்கவேண்டும். அப்படி என்றால் தான் பிரிந்துசெல்லும், உரிமை எமக்கு கிட்டும். இதனைப் புரியாத சில அமெரிக்க அடிவருடிகள் தமிழர்களை பிழையான பாதையில் வழி நடத்துகிறார்கள். இலங்கைக்கு மேலும் 1 வருடத்தை அமெரிக்கா கொடுத்துள்ளது.
இலங்கைக்கு மேலதிக அவகாசத்தை கொடுத்து , தமிழர் தாயகம் எங்கும் சிங்களவர்கள் குடியேற இந்த அமெரிக்க அடிவருடிகள் உதவி புரிகிறார்கள். அமெரிக்காவை எதிர்பது எமது நோக்கம் அல்ல. ஆனால் கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டாம் என்றே கோருகிறோம் ! புரிகிறதா ?

லங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது.
இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.
12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது.
பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது.
அதனால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.
ஆனால், பொதுவான பட்ஜெட்டிலிருந்து இலங்கை விவகாரத்துக்கான தனியான நிதி ஒதுக்கப்படும் என்று ஆணையத்தின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
ஆனால், தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கையை ஏற்க முடியாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியது. வாக்களிப்பின் மூலமே நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா கூறியது.
மற்ற இணை அனுசரணை நாடுகளும் நிதிவளம் இல்லை என்ற வாதத்தை எதிர்த்துக் கருத்து வெளியிட்டன.
இறுதியாக தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten