தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 maart 2014

சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டார் நவநீதம்பிள்ளை

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
தென்கொரிய குழுவுடனான சந்திப்பின் போது, நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
இந்த உயர்நிலைக் கலந்தாய்வின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கூட ஜெனிவாவில் தங்கியிருந்தார்.
வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், தென்கொரிய அரசாங்கத்தை அதற்குச் சாதகமாகத் திருப்பும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட நகர்வு இது என்று அந்த வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 47 நாடுகளில் தென்கொரியாவும் ஒன்றாகும்.
அமெரிக்கத் தீர்மானத்துக்கு நவநீதம்பிள்ளை வெளிப்படையாக ஆதரவு கோரி வருகிறார்.
முன்னாள் தென்னாபிரிக்க அதிகாரியான அவர், தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட வடகொரியாவுடன் ஒப்பிடப்படும் நிலையை சிறிலங்கா சந்தித்திருக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/63127.html

சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கை – உறுப்புநாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்கிறது ஐ.நா

சிறிலங்காவில் போரின் போதான சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக, அவரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை, நிலுவையில் உள்ள தீர்மானத்தின் மூலம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமைகள் சட்டவாளர் யஸ்மின் சூகா, மற்றும் பிரித்தானிய மனிதஉரிமை சட்டவாளர் குழுவின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பர்ஹான் ஹக் நேரடியாகப் பதிலளிக்க மறுத்து விட்டார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள் நிலுவையில் உள்ள தீர்மானத்தில் இதனைக் கருத்தில் எடுக்க வேண்டும்.
அதற்கான பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுவதாகவும், பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/63124.html

Geen opmerkingen:

Een reactie posten