[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 07:11.06 AM GMT ]
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்னும் தாய் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரின் மகளான 13 வயதுச் சிறுமியான விபூசிகாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரை அயலில் உள்ளவர்களிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், அயலில் உள்ளவர்கள் குறித்த சிறுமியை பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதனால் குறித்த சிறுமி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உறவினர்கள் யாரும் சிறுமியை தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்க முன்வந்தால், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று அவர்களிடம் குறித்த சிறுமியை ஒப்படைக்க பொலிஸார் தயாராக உள்ளனர் என்றார்.
கடந்த 13ம் திகதி ஜெயக்குமாரியும், விபூசிகாவும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyDRdLWir7.html
இல்லாத புலிக்கு முகவரி கொடுத்து தமிழர் பிரதேசத்தில் தேடுகிறது அரசாங்கம்: கோவிந்தன் கருணாகரம்
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 07:24.33 AM GMT ]
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இல்லாத ஊருக்கு செல்லாத வழிகாட்டிய மாதிரி என்று கிராமத்தில் பேசுவார்கள். அதுபோல இன்று அரசும் இல்லாத புலிக்கு இருக்காத முகவரி கொடுத்து, செல்லாத தலைவனை தனக்கு சாதகமாக உருவாக்கி உலவிட்டு, தமிழ்ப் பிரதேசமெங்கும் தேடுகின்றது.
இதையிட்டு நாம் சிரிக்க முடியாது. ஏனெனில் சிங்கள பெரும்பான்மையினத்தை தம்பக்கம் அசையாது வைத்திருக்க “புலியும், புலிசார்ந்த பூச்சாண்டியும் தேவை.
புலியின் பெயர் இல்லாது விட்டால் அரசின் சாயம் தெற்கில் வெளுத்து விடும். இதுதான் அண்மைக்கால கண்டுபிடிப்பான புலிகள் மீள எழுகின்றார்கள் என்ற கோசம். அரசுக்கும் இராணுவத்துக்கும் தமது தமிழ்ப் பிரதேச ஆக்கிரமிப்பை, இருப்பினை நிலை நிறுத்த இந்த புலிப்பிரசாரம் அவசியம்.
புலிகள் என்ற பிராண வாயுதான் அரசு என்ற பேரினவாதத்தின் உயிரினை, அதன் இருப்பினை, அதன் செல்வாக்கினை தெற்கில் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த புலிகள் மீள் எழுச்சி என்ற பெயரில் இனி தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவ முகாம், காவலரண்கள், முறைக்கும் சுற்றிவளைப்புக்கள் நிகழும். அப்பாவிகள் கைது செய்யப் படுவார்கள். மீளவும் தமிழ்ப் பிரதேசங்களிள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இராணுவ மேலாதிக்க நிலை உருவாகும்.
இந்த எதிர்கால செயல்பாடுகளை நியாயப்படுத்தவும் தனது நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு நியாயப்படுத்தவுமே இந்த புலிக்கதையை அரசு கட்டி விட்டுள்ளது. இந்த வகையில் தான் அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இதற்கேற்ற வகையில் இதனை முறியடிக்கும் வகையில் நமது நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் வகுத்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் ஒரணியில் திரளவேண்டியதும் ஒரு தலைமைக்கு கட்டுப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyDRdLWisy.html
Geen opmerkingen:
Een reactie posten