அதுபோல இலங்கையை விசாரிக்க இவ்வாறு ஒரு நீதிமன்ற அமைக்கப்படவேண்டும் என்று, பிரித்தானியா தற்போது ஐ.நாவைக் கோரவுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அமெரிக்கா கொண்டுவந்துள்ள ஒன்றுக்கும் உதவாத பிரேரணையை வைத்து எதனையும் செய்யமுடியாது என்று உணர்ந்துள்ள தமிழர்கள், தற்போது மாற்று வழி என்ன இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்துள்ளார்கள். இது மிகவும் ஆரோக்கியமான விடையமும் கூட. ஏன் எனில் நாம் ஒரு நாட்டை நம்பி இருக்க முடியாது அல்லவா ? எனவே நவனீதம் பிள்ளையின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவியோடு ஐ.நா வில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உலகத் தமிழர்களால் முன்வைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள், தமது அரசாங்கம் ஊடாக நடவடிக்கையை எடுக்கவேண்டும். ஐ.நாவின் சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது என்று, தீர்ப்பு வழங்குமேயானால் அதனூடாக சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரமுடியும். அத்தோடு இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், பிரிந்துசெல்வது மற்றும் தமிழர்களின் பாதுகாப்பு, சுயநிர்ணய உரிமை என்பன தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை புலம்பெயர் தமிழர்கள் ஆரம்பிப்பார்கள். எனவே இலங்கையை விசாரிக்க ஐ.நா சிறப்பு நீதிமன்றம் ஒன்றைக் கொண்டுவரப்படவேண்டும் என்ற அழுத்தத்தை பிரித்தானிய தமிழர்கள், முன்வைத்துள்ளார்கள். இதனை டேவிட் கமரூனின் அரசாங்கள் ஆதரிக்கும் எனவும் மேலும் அறியப்படுகிறது.
எதுஎவ்வாறு இருப்பினும், உலகளாவிய ரீதியில் இந்த அழுத்தம் ஐ.நாவுக்கு செல்லவேண்டும். அப்படி எனில் தான் இதனை ஐ.நா நடைமுறைப்படுத்தும்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6566
Geen opmerkingen:
Een reactie posten