தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

இராணுவத்தின் மீதான புதிய குற்றச்சாட்டுக்களை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார் !

பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கை பாதுகாப்பு படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இராணுவம் மறுத்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு படையினரால் தமிழ் கைதிகள் தொடர்ந்தும் பாலியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு உதவியமைக்காக, கைதிகளை பழிவாங்கும் நோக்கில் இலங்கை படையினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட அறிக்கையானது இராணுவத்தை அவமானப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கைதிகளை இராணுவத்தினர் எந்த வகையிலும் சித்திரவதை செய்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட கைதிகள் தொடர்பில் தெளிவான சட்ட வரையறையின் ஊடாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlu6.html

Geen opmerkingen:

Een reactie posten