தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

ஆம் என்னைக் கற்பழித்தார்கள் சிங்களவர்கள்: ரஷ்யப் பெண் (அதிரும் வீடியோ)

பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவருடைய தம்பியும் ரஷ்ய நாட்டு காதலியும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த குராம் ஷேக் தனது காதலியுடன் இலங்கையில் உள்ள தங்காலை என்னும் பிரதேசத்தில் உள்ள விடுதியில் 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் திகதி தங்கியிருந்தார். அன்றைய தினம், குறித்த ரஷ்யப் பெண்ணோடு தங்காலை பிரதேச சபைத் தலைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனைத் தடுக்க வந்த குராம் ஷேக் மீது அவரும், அவரது சகாக்கள் கடும் தாக்குதல் நடத்திக் கொன்றார்கள். இறுதியாக அந்த ரஷயப் பெண்ணையும் கற்பழித்தார்கள் சிங்களவர்கள். 

இதில் தங்காலை பிரதேச சபை உறுப்பினரே, அப்பெண்ணை கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இருப்பினும் தங்காலை பிரதேச சபை உறுப்பினர் மகிந்தரின் நெருங்கிய நண்பர் ஆவார். இதனால் அவரை பொலிசார் கைதுசெய்து விட்டு உடனடியாக விடுதலையும் செய்துவிட்டனர். உலகளாவிய ரீதியில் எழுந்த கடும் அழுத்தங்களை அடுத்தே இக்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க இலங்கை நீதிமன்றம் இணங்கியது. தற்போது ரஷ்யாவில் இருந்து கொழும்பு சென்ற அப்பெண், இன்று நீதிமன்றில் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடையாள அணிவகுப்பும் நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 





http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6592




Geen opmerkingen:

Een reactie posten