தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 maart 2014

இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள பிரேரணை பாரதூரமானதாக அமையும்!- பிரதீப மகானாமஹேவா



இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது! மாவை, அருட்தந்தை கீதபொன்கலன்
[ செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014, 10:12.29 AM GMT ]
வடக்கில் இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட விடுதலைப் புலிகளின் உருவாக்கம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நாங்கள் நினைத்ததை முழுமையாக எழுத முடியாது ஆனாலும் இராஜதந்திர சூழலில் இவ் அறிக்கையை சர்வதேசம் சமர்ப்பித்தாலும் அதனை முழுமையாக ஏற்கவில்லை என மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டார்.
இராஜதந்திரிகளை குழப்பும் நடவடிக்கையிலும் ஐ.நாவில் சில தமிழர்கள் ஏன் ஒற்றுமையாக தமிழர்களின் வெற்றியை சர்வதேசத்தில் அடைய முனைய மாட்டார்களா என லங்காசிறி வானொலியின் சிறப்பு நிருபர் ஜெனிவாவில் நேரடியாக சந்தித்து கேட்ட போது குறிப்பிட்டார்.
இலங்கையில் உண்மையான தலைவன் இல்லை! மகிந்த அடிப்படை வாதிகளுடன் அருட்தந்தை கீதபொன்கலன் ஆதங்கம்
இலங்கை இன்று உண்மையான தலைவன் இல்லாமல் தத்தளிக்கிறது. இதனை யார் அறிவர், இலங்கையின் நிலை ஆபத்தில் உள்ளது என மனித உரிமை ஆர்வலர் அருட்தந்தை கீதபொன்கலன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் கூறுகிறது, எமது சிக்கலை நாம் தீற்போம் என. இது சாத்தியமற்றது, சர்வதேச விசாரணையைத் தடுக்க முடியாது என அருட்தந்தை கீதபொன்கலன லங்காசிறி வானொலியின் சிறப்பு நிருபர் ஜெனிவாவில் நேரடியாக சந்தித்து கேட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார்.
http://news.lankasri.com/show-RUmsyDRZLWkr2.html
இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள பிரேரணை பாரதூரமானதாக அமையும்!- பிரதீப மகானாமஹேவா
[ செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014, 10:29.18 AM GMT ]
அமெரிக்கா உட்பட நாடுகள் சிலவற்றினால் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பிரேரணை முன்னர் நிறைவேற்றப்பட்டதனை விடவும், பாரதூரமாக அமையுமென சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் ஊடாக வலியுறுத்தப்பட்டதாக கொத்தலாவல பாதுகாப்பு பீடத்தின் வேந்தர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்தார்.
ஆயினும், இம்முறை கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் காணப்படும் 8 ஆவது அம்சம் மிகவும் பாரதூரமானது என அவர் குறிப்பிட்டார்.
பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அம்சத்திலேயே தொடர்ந்தும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதீப மஹானாமஹேவா, ஏனைய விடயங்கள் உள்ளக பொறிமுறையுடன் தொடர்புடையவை எனக் கூறினார்.
இதேவேளை, பிரேரணையில் நேற்றைய தினம் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கொத்தலாவல பாதுகாப்பு பீடத்தின் வேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவினால் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதீப மஹானாமஹேவா தெரிவித்தார்.
இந்தப் பிரேரணையில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான குழுவை நியமித்தல் மற்றும் விசாரணையை நிறைவுசெய்வதற்கான கால அவகாசம் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பிலேயே வாக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிட்ட அவர், வாக்கெடுப்பின் நிறைவில் சர்வதேச விசாரணை தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கொத்தலாவல பாதுகாப்பு பீடத்தின் வேந்தர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா கூறினார்.
http://news.lankasri.com/show-RUmsyDRZLWkr3.html

Geen opmerkingen:

Een reactie posten