தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

ஜெனிவாவில் தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் பரப்புரைகள் மும்முரம்! களத்தில் அமெரிக்க, பிரிட்டன் இராஜதந்திரிகள்

அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறு யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம்
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 03:18.58 AM GMT ]
யேர்மனியில் 631 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழியில் ஒரே நாளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் யேர்மன் சார்பில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறும் மற்றும் தமிழ் மக்களுக்கு உண்மைத்தன்மையான நீதி கிடைக்கும் வகையில் யேர்மன் அரசாங்கத்தின் பங்கும் மற்றும் நிலப்பாடும் என்பது ஐநா மனித உரிமை பேரவையில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தி யேர்மனியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழியில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பானது முக்கியமான வரலாற்றுப் பதிவாகும். 1979 இல் 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நோபல் பரிசு பெற்ற 5 பேர் உள்ளிட்ட சமூகத்தலைவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சுமார் 40 இற்கு மேற்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு மாபெரும் சேவையாற்றியுள்ளது.
இந்நிலையில், இலங்கை இறுதிப்போர் தொடர்பிலான விசாரணையில் கட்டம் 1 இல் இறுதிப்போரில் நடைபெற்றது போர்க்குற்றம் என்பதை 2010 இல் நிறுவிய அத்தீர்ப்பாயத்தின் முடிவானது, ஈழத்தமிழர் தொடர்பிலான சர்வதேச போக்கில் மாபெரும் ஆதிக்கத்தை செலுத்தியது என்பது மறுப்பதற்கில்லை.
இந்நிலையில் இன்றைய முடிவும், எமக்கான நீதியை பெற்றுத் தரும் நாள் விரைவில் வந்தே தீரும். முழு உலகிற்கும் செய்தியை வழங்கியுள்ள இத்தீர்ப்பை உலகம் இதய சுத்தியுடன் உள்வாங்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன், ஒருங்கிணைப்பில் நடைபெற்ற தீர்ப்பாயம் முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் இனஅழிப்பு நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலிலும் இனஅழிப்பு நடைபெற்றிருக்கின்றது, முள்ளியாவாய்க்காலிற்கு பிறகும் இனஅழிப்பு தொடர்கின்றது என்று உறுதியாக ஆதாரத்துடன் சொல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகவல் சென்றடைந்ததால் அவர்களிடையே அன்று ஈழத்தமிழர்களின் விடையம் முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்டது என்பது ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக அறியக் கூடியதாக அமைந்தது.
முன்னைய யேர்மன் நாட்டின் மனிதவுரிமை விவகாரக்குழுவின் அங்கத்துவரும் இன்றைய யேர்மன் அரசாங்கத்தின் மனிதவுரிமை ஆணையாளர் Christian Strässer அவர்களுடன் கடந்த ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் இன அழிப்பு குறித்து தொடர்ச்சியான தொடர்பாடல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன்
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlu2.html

ஜெனிவாவில் தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் பரப்புரைகள் மும்முரம்! களத்தில் அமெரிக்க, பிரிட்டன் இராஜதந்திரிகள்
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 05:38.27 AM GMT ]
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25வது கூட்டத்தொடர் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன.
அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராஜதந்திரிகள் பிரேரணைக்கு ஆதரவு வழங்கக் கூடிய நாடுகளைச் சம்மதிக்க வைக்கும் இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகளும் பிரேரணைக்கு ஆதரவு தேடும் முயற்சியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள பிரேரணைகள் தமிழ் மக்களின் எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனம் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்படுகின்ற போதும், பிரேரணை தோற்கடிக்கப்படுவது இலங்கை அரசை உற்சாகப்படுத்துவதாக அமைந்துவிடும் என்ற அடிப்படையில் பிரேரணை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் பணியில் அவர்களும் முழுமையாக ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, பிரேரணையைத் தோற்கடிக்கச் செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் இலங்கை அரச தரப்பும், அவர்களது நட்பு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆயினும் இங்கு காணப்படும் தற்போதைய நிலைமைகள் அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்றே தெரிகின்றது.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பவை தொடர்பான செய்திகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உறுப்பு நாடுகளைச் சம்மதிக்க வைப்பதில் தடையாக இருந்து வருகின்றன.
அதேவேளை இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று ஐ.நா. முன்றலில் புலம்பெயர் வாழ் சிங்கள மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்துக்காக இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் சுமார் மூவாயிரம் வரையான சிங்கள மக்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளைய தினம் தமிழ் மக்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை அதேஇடத்தில் நடத்த உள்ளனர்.
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமதி ஜெயகுமாரி பாலேந்திரன், அவரது மகளான 14 வயது விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த ஆரப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlu5.html

Geen opmerkingen:

Een reactie posten