தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 maart 2014

இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 04:04.28 PM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே  இலங்கை விவகார ஐநாவின் நிபுணர் குழுவின் தலைவருமான மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஓகஸ்ட் 31ம் நாளுடன் நிறைவடையவுள்ளது.
இதனால், புதிய ஆணையாளர் ஒருவரை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முன்மொழிய, அதனை ஐ.நா பொதுச்சபை அங்கீகரிக்க வேண்டும்.
நவநீதம்பிள்ளை ஆபிரிக்க வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதால், அடுத்த ஆணையாளர் பதவி ஆசிய வலயத்துக்கே அளிக்கப்பட வேண்டும்.
இந்தநிலையில், ஆசிய வலயத்தில் இருந்து, இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்று ஐ.நா உயர்மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், அனைத்துலக அளவில் மனிதஉரிமைகளுக்காக பாடுபடுபவருமான, மர்சுகி தருஸ்மனின் பெயரே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், தற்போது ஐ.நாவில் சிறப்பு அறிக்கையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரே, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த, நிபுணர்குழுவின் தலைவராக பணியாற்றியவராவார்
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இவர் தொடர்ந்தும் பல்வேறு அனைத்துலக கருத்தரங்குகளிலும், ஊடகங்களிலும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அடுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக, மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட்டால், இலங்கைக்குப் பெருந்தலைவலியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWls1.html


இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 04:28.05 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகும் சூழ்நிலையிலும், அங்கே மோசாமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும், பாலியல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாக பிரிட்டனில் இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது.
பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தவர்கள் சிலர், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு திரும்பி வந்த பின்னர் அளித்திருந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஃபவுண்டேஷன் ஃபார் ஹியுமன் ரைட்ஸ் அமைப்பு இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் அமைப்பின் அணுசரணையில் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக இந்த அறிக்கையை உருவாக்கிய விசாரணைக் குழுவின் தலைவரும், இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐநா. தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினராக இருந்தவருமான, மனித உரிமைகள் ஆர்வலர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
9 சட்டத்தரணிகள் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் 40 பேரிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்று இந்த அறிக்கையை உருவாக்கியதாக அவர் கூறினார்.
சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுதல், தடுத்துவைக்கப்படுதல், கொடூரமான சித்ரவதைகள் மற்றும் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுதல் போன்றவற்றுக்கு தாம் ஆளான நேர்ந்ததாக இந்த விசாரணை குழுவிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் இருந்து வெளியேறி ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள் மீண்டும் திரும்பிவந்தவர்களையே தாங்கள் விசாரித்திருந்ததாக யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
வாக்குமூலங்களில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் என்றே தாங்கள் குறிப்பிடுவதாகவும், ஏனென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும், இலங்கை அரசாங்கமும் இது தொடர்பான விசாரணைகளை இதுவரை நடத்தியிருக்கவில்லை என்றும் யாஸ்மின் சூக்கா குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் மனித உரிமை ஆணையத்தின் ஊடாக தமது அறிக்கையினை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்தின் பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இப்படியான கொடுமைகள் எல்லாம் முடிவுக்கு வந்தால்தான், அந்நாட்டில் சமாதானம் மலருமென்று தாம் நம்புவதாக இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐநா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவரும், தற்போது ஃபவுண்டேஷன் ஃபார் ஹியுமன் ரைட்ஸ் அறக்கட்டளைக்காக இலங்கை சம்பந்தமாக ஆய்வு செய்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்தவருப்பவருமான யாஸ்மின் சூக்கா கூறினார்.
இராணுவம் மறுப்புமனித உரிமைகள் ஆர்வலர் யாஸ்மின் சூக்கா பிபிசியிடம் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாமே அடிப்படயற்ற குற்றச்சாட்டுக்கள் என்று இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசியிடம் மறுத்தார்.
"இலங்கை தொடர்பான யாஸ்மின் சூக்காவின் அறிக்கைகள் எல்லாமே இலங்கை அரசுக்கு எதிரானவை, பக்கச்சார்பானவை. நாட்டுக்கு வெளியே செயற்படும் பிரிவினைவாதிகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் நிதி திரட்டி அதன் துணையோடு, அவர்கள் கூறும் தனி ஈழம் என்கிற இலக்கை அடைவதற்கு பக்கசார்பான யாஸ்மின் சூக்கா போன்ற நபர்கள் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எதற்குமே உரிய நியாயமான ஏற்கத்தக்க ஆதாரங்கள் எவையுமே இல்லை." என இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWls2.html

Geen opmerkingen:

Een reactie posten