[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 11:50.20 PM GMT ]
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா வாக்களிக்காததைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பிரேரணைக்கு இந்தியா கண்டிப்பாக வாக்களித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRbLWju1.html
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலையால் அதிர்ச்சியில் உறைந்த உலகம்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:27.23 AM GMT ]
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வாக்கெடுப்பிற்கு வந்த இந்தியா அமெரிக்கப் பிரேரனையின் முக்கிய பந்தியை அகற்ற பாக்கிஸ்தானுடன் இணைந்து வாக்களித்ததுடன் பிரேரனை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தமை பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWju6.html
இந்தியா ஆதரவளிக்காமை ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசியதற்கு ஒப்பானது!- அரியநேத்திரன் பா.உ
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 01:07.10 AM GMT ]
நேற்று நடைபெற்ற ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியா ஆதரவாக வாக்களிக்காமை பற்றி கருத்துக் கூறும்போதே இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் கருத்துக் கூறுகையில்.
கடந்த வருடம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா இம்முறையும் ஆதரவாக வாக்களிக்கும் என்ற நம்பிக்கையுடனே உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பையும் மீறி தமக்கு மாத்திரம் சாதகமான முடிவினை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இந்தியா ஏமாற்றி நடுக்கடலிலே விட்டுச்சென்றிருக்கின்றது.
இலங்கையிலே வாழ்கின்ற தமிழ்மக்களின் உறவில் தொப்புள்கொடி உறவு இந்தியா என்று நம்பி இருந்த மக்களுக்கு இந்தியா செய்த சதி வேலையால் அந்த புனிதமான உறவை சொல்வதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
ஜெனிவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக பலநாடுகள் வாக்களித்திருந்தன. அத்தோடு சில நாடுகளும் எதிராகவும் வாக்களித்திருந்தன. ஆனால் இரண்டும் கெட்டான் நிலையில் மீதமான நாடுகள் விலகி இருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியாவும் விலகியிருந்தது. அதுதான் தமிழ்மக்கள் வெட்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
இந்த வாக்கெடுப்பில் இந்தியா இந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருக்குமானால் இன்னும் பல நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கும். இது அனைத்து தமிழர்களுக்கும் செய்த மிகப்பெரும் துரோகமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
வடகிழக்கு மக்களுக்கான இணைந்த தாயகத்தில் நிரந்தர அரசியல் தீர்வைக்கொண்டு வருவதற்காக 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மாகாணசபை முறைமையும் கொண்டுவரப்பட்டது. அது மாத்திரமல்ல எமது இளைஞர்களை ஒன்றிணைத்து பயிற்சிகள் வழங்கி ஆயுதங்களைக் கொடுத்து போராட்டத்திற்கு இட்டுச்சென்று இறுதியில் அதே இளைஞர்களை கொன்றொழிப்பதற்கும் இதே இந்தியாதான் உந்து சக்தியாக இருந்தது என்பதனை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 20வருடங்களுக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி யினரால் நீதிமன்றத்தில் இணைந்த வடகிழக்கைப் பிரிப்பதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இணைந்த வடகிழக்கு இரண்டாக துண்டாடப்பட்டது. அன்று இதனை இணைக்கவேண்டும் என்று பாடுபட்ட இந்தியா இதனை கவனத்தில் எடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்தது.
வடகிழக்கு மக்கள் இராணுவமயமாக்கலினாலும், மனித உரிமை மீறல்களாலும் பல இலட்சம் தமிழ்மக்கள் கொள்ளப்பட்டும் இருக்கின்றார்கள். இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாது இன்று ஒட்டுமொத்த தமிழர்களும், பல நாடுகளும் பலவழிகளிலும் முயற்சிகள் எடுத்தபோதும் தொடர்ந்தும் மௌனம் காத்த இந்தியா இறுதி நேரத்தில் ஆதரவளிக்காமல் விலகிக்கொண்டதனை பார்க்கும் போது எதிர்காலத்தில் வடகிழக்கு மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வில் தொடர்ந்தும் இந்தியா பங்களிப்புச் செய்யுமா என்பது எல்லோர் மனங்களிலும் சந்தேகத்தினை ஏற்படுத்தயுள்ளது.
இதற்கான ஒட்டுமொத்த பதிலை இந்தியாவிலே நடைபெறவிருக்கும் எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உரியவர்களுக்கு உரிய தருணத்தில் கொடுப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjvz.html
பாகிஸ்தான், சீனா, கியூபாவுடன் இந்தியா இணைந்தமை வெட்ககேடான விடயம்.
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 02:45.54 AM GMT ]
இந்தியாவில் தேர்தல் வரப்போகின்றது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இந்த நிலையில், இந்தியாவின் முடிவெடுப்பாளரால் எடுக்கப்பட்ட செய்தி மிகவும் கவலைக்குரியது என்றார்.
நேற்று இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் இந்தியா நடுநிலையாக வாக்களித்தமை குறித்து பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjv3.html
அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியவில்லை!- அமைச்சர் ஜி எல் பீரிஸ் சான்றிதழ் வழங்கியுள்ளார்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 03:10.02 AM GMT ]
வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ்,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் போது அமெரிக்கா பல நாடுகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் உறவுகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்க சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சில நாடுகள் அமெரிக்காவுடன் இருக்கும் பொருளாதார உறவை கருத்திற்கொண்டே வேறு வழியின்றியே இலங்கைக்கு எதிராக வாக்களித்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையை பொறுத்தவரை, சக்திமிக்க நாடுகளின் அழுத்தங்களை பொருட்படுத்தவில்லை.
இந்த நாடுகளை பொறுத்தவரையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும் என்று விரும்புகின்றன.
இந்தநிலையில் இந்தியாää வாக்களிப்பில் பங்கேற்காமல் இருந்தமை முக்கியமான விடயம் என்றும் ஜி எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா, இலங்கைக்கு எதிராகவே மனித உரிமைகள் பேரவையில் வாக்களித்திருந்தது.
எனினும் இன்று வாக்களிக்காமல் இருந்தமையானது, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியாதமையை குறித்து காட்டுகிறது.
அதிலும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளும் வாக்களிப்பில் பங்கேற்காமையானது, அந்த நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்தை மதிக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையை பொறுத்தவரை யோசனையில் 10 ம் பந்தியை நீக்குமாறு கோரியிருந்தது.
இந்த பந்தியில் நவநீதம்பிள்ளை நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ளும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
நவநீதம்பிள்ளை ஏற்கனவே பக்கசார்பாக நடந்துகொண்ட சம்பவங்களை கொண்டே அவரின் தலையீட்டை நீக்குமாறு இலங்கை கோரியது.
இதனை நீக்குமாறே பாகிஸ்தான் வாக்கெடுப்பு ஒன்றை கோரியிருந்தது. எனினும் அது தோற்கடிக்கப்பட்டது
இந்தநிலையில் இலங்கை தொடர்ந்தும் தமது உள்ளக விசாரணைகளை முன்கொண்டு செல்லும் என்று ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjv5.html
இந்தியா ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திவிட்டது: ஜெனிவாவிலிருந்து சிவாஜிலிங்கம்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 03:25.07 AM GMT ]
ஈழத்தமிழர்களின் முதுகில் இந்தியா மீண்டும் குத்திவிட்டது. என்ற உணர்வதான் ஏற்பட்டுள்ளது. என அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா நடுநிலையாக வாக்களித்தமை தொடர்பிலும், சர்வதேச விசாரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பிலும் ஜெனிவாவில் அமைந்துள்ள லங்காசிறி கலையகத்திற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjv6.html
ஐ.நாவில் இந்தியா செய்தது பாரிய தவறு: சுனந்த தேசப்பிரிய மற்றும் நிமல்கா
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 04:24.24 AM GMT ]
2012லும், 2013லும் எதிராக வாக்களித்தது. ஆனால் இம்முறை விலகியிருந்தமை. பெரிய தவறு,
இலங்கையில் போர் முடிவுக்கு வந் பின்னர், தமிழர்கள் உள்பட அங்குள்ள எல்லா சமூகத்தவருக்கும் அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சுனந்த தேசப்பிரிய.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இறுதிவரை போராடும் என நிமல்கா பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியா இறுதி நேரத்தில் இவ்வாறு விலகிக் கொண்டமை, போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து வாய் திறக்காமல் இருந்தமை மிகவும் கவலை அளித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjwy.html
Geen opmerkingen:
Een reactie posten