தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

தேடப்படும் புலிகளின் முக்கியஸ்தர்களின் போஸ்டர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டது !


இராணுவத்தினரால் தேடப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலான சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று கைது செய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அத்துடன் இளைஞர்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தருமபுரம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுப்படுகின்றவர்கள்(புலிகள்) தொடர்பாக வட பகுதியில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிலவற்றை குறிப்பிட்ட சிலபகுதிகளில் மர்ம நபர்கள் கிழித்தெறிந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவமும் பொலிஸ{ம் கூழாமுறிப்புக் கிராமத்தினைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தில் கூழாமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான அகஸ்டின் சலூஜன் (வயது 24), இராசேந்திரம் கமலதாஸ் (வயது 19), சுரேஷன் (வயது 25), நஜீதரன் (வயது 25) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் அப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற உறவினர்கள் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு கோரியபோது, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என்றும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னரே விடுதலை செய்யமுடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6591

Geen opmerkingen:

Een reactie posten