தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

இனி வரும் களம் தமக்கில்லை என்ற நிலையிலும் தான் அழிந்தாலும் தமிழரை அழிக்க என்னும் காங்கிரஸ்!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 05:43.11 AM GMT ]
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தார். அப்போது,
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்.
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்பது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
தீர்மானம் குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்திருக்கக் கூடும்.
அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால், இதுபோன்ற தீர்மானத்தை ஆதரிக்க இயலவில்லை.
காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக கருணாநிதி கூறி இருப்பது ஆச்சரியமளிக்கிறது. மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை தி.மு.க. ஆதரித்தால் வரவேற்போம். தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுவதால், யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாது என்று அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjw3.html
இலங்கையின் மிரட்டல் காரணமாகவே ஐ.நா. சபையில் பதுங்கியது இந்தியா!- பழ. நெடுமாறன்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 04:39.27 AM GMT ]
இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது என்று "உதயனுக்குத்' தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது.
இது தொடர்பில் பழ.நெடுமாறன் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து விசாரணை நடத்த வழிசெய்யும் என்று தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கை வெளிவந்து 24 மணிநேரத்துக்குள்ளேயே, காங்கிரஸ் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்கின்றது. அரைகுறையான அமெரிக்கத் தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்திய அரசை, இலங்கை அரசு மிரட்டுகின்றது. இந்தியாவின் தென்மண்டல இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத் தளபதியை சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்த ஒளிப்படங்களை சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது. இது இந்தியாவுக்க விடுக்கப்பட்ட முதலாவது மிரட்டல்.
எமக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களித்தால் இவ்வாறே சகல விடயங்களையும் வெளிப்படுத்தி விடுவோம் என்று சமிக்ஞை எச்சரிக்கையாக அது அமைந்தது.
இந்திய மத்திய அரசு இறுதிப் போரின் போது இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை இலங்கை வெளியிட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே, வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் இந்தியா நழுவியது என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjw1.html
இந்தியாவை இனி நம்ப முடியாது! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திவிட்டது: சிவாஜிலிங்கம், கிருபாகரன், நிர்மானுசன்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 08:51.16 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணைக்கு, இந்தியா வாக்களிக்காமல் நடுநிலைமை வகித்தமை தொடர்பில் பல்வெறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரகின்றன.
அந்தவகையில், மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக ஜெனிவாவில் லங்காசிறி கலையகத்திற்கு அளித்த நேர்காணல்களில் பின்வருமாறு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திவிட்டது: ஜெனிவாவிலிருந்து சிவாஜிலிங்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பாகிஸ்தானால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தமை மூலம் ஈழத்தமிழர்களின் மனநிலையை இந்தியா புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் முதுகில் இந்தியா மீண்டும் குத்திவிட்டது. என்ற உணர்வதான் ஏற்பட்டுள்ளது. என அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா நடுநிலையாக வாக்களித்தமை தொடர்பிலும், சர்வதேச விசாரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பிலும் ஜெனிவாவில் அமைந்துள்ள லங்காசிறி கலையகத்திற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான், சீனா, கியூபாவுடன் இந்தியா இணைந்தமை வெட்ககேடான விடயம்- ச.வி.கிருபாகரன்
இந்தியாவின் பங்கு பாரிய ஏமாற்றத்தினைக் கொடுத்துள்ளது. காங்கிரசால் முடிவெடுக்கபபட்டதா என்று புரியவில்லை. ஆனால் இனி இந்தியாவை நம்பலாமா என்ற கருத்து நிச்சயமாக நடைபெறாது என்கிறார் ச.வி.கிருபாகரன்.
இந்தியாவில் தேர்தல் வரப்போகின்றது. தமிழ் நாட்டில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இந்த நிலையில், இந்தியாவின் முடிவெடுப்பாளரால் எடுக்கப்பட்ட செய்தி மிகவும் கவலைக்குரியது என்றார்.
நேற்று இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் இந்தியா நடுநிலையாக வாக்களித்தமை குறித்து பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
இராணுவ அடக்குமுறையில்லாமல் தமிழர்கள் சுதந்திரமாக செயற்பட இத்தீர்மானம் துணைநிற்கும் என்பது கேள்வி: நிர்மானுசன்
அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள், இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறும் தன்மை மற்றும் மனித உரிமை விடயங்களில், மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளன.
ஆனால், இத்தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமா என்ற கேள்வி வருகின்றது.
இலங்கையில் வாழும் தமிழர்கள் இராணுவ அடக்குமுறையில்லாமல் சுதந்திரமாக செயற்பட இத்தீர்மானம் துணைநிற்கும் என்பது கேள்விக்குறி என ஜெனிவாவில் உள்ள லங்காசிறி கலையகத்தற்கு அளித்த நேர்காணலில் அரசியல் விமர்சகர் நிர்மானுசன் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjx5.html
காங்கிரஸ் அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்!- வைகோ
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 10:12.02 AM GMT ]
அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது. 
2010 அக்டோபர் 25 ல் சனல்-4 ல் வெளியான காணொளியில், 8 தமிழ் இளைஞர்கள் அம்மணமாக கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோரக் காட்சி,
அதே ஆண்டின் டிசம்பர் 2 ல் வெளியான காணொளியில் தமிழ்ப் பெண் இசைப்பிரியா சிங்கள இராணுவ மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு, மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சி,
2013 பெப்ரவரி 17 ல் வெளியான காணொளியில் மாவீர மகன் 12 வயதான பாலச்சந்திரன் மார்பில் 5 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், மண்ணில் சடலமாகக் கிடந்த காட்சி,
இந்த 2014 ஜனவரி இறுதி வாரத்தில் தெரிய வந்த காணொளியில் தமிழ் இளம்பெண்கள் சிங்கள இராணுவ வெறி நாய்களால் கோரமாகக் கற்பழிக்கப்பட்டு, அங்கங்களைச் சிதைத்துக் கொல்லப்பட்ட நிலையில், ஆடைகளற்ற நிலையில் கிடந்த அந்தச் சடலங்களை, சிங்களக் கூட்டத்துக்கு மத்தியில் மண்ணில் போட்டு, அந்த உடல்களின் மீது இதுவரை உலகில் எங்கும் நடைபெறாத விதத்தில் நெஞ்சை நடுங்கச் செய்வதும், சொல்லிலோ எழுத்திலோ கூற முடியாததுமான அக்கிரமத்தில் சிங்கள ஓநாய்கள் ஈடுபட்ட காட்சி,
கடந்த வாரத்தில் கிடைத்த காணொளியில் ஒரு குளக்கரையில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் அம்மணமாகத் துப்பாக்கி முனையில் உட்கார வைக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொருவராக கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் கொடுந்துன்பக் காட்சி
இவை அனைத்தும் அனைத்துலக மனித குலத்துக்கு இன்னமும் மனச்சாட்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் அறைகூவல் ஆகும்.
நானிலத்தில் தமிழ் இனத்துக்கு நாதியே இல்லையா? நீதியே கிடையாதா? என்ற தமிழ்க் குல மக்களின் ஓலக்குரல் உலகின் மனச்சாட்சியின் கதவுகளைப் பலமாகத் தட்டியதால், அதுவரை குருடாக இருந்த உலகோரின் கண்கள் மெதுவாக விழித்தன. செவிடாக இருந்த உலகத்தின் காதுகள் மெதுவாகத் திறந்தன.
அதன் விளைவாகவே, 2009 ல் சிங்கள அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலில் 2011ல் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, 2012ல் தமிழகத்தில் வெடித்த மாணவர் கிளர்ச்சியால் சிங்கள அரசுக்கான ஆதரவு நிலை மாறி, தமிழர்களுக்கான நியாயத்தின் குரல் மேலும் வலுப்பெற்று, 2013ல் அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போனது என்றாலும், எதிர்காலத்தில் நீதிக்கான நம்பிக்கையை விதைத்தது.
இந்த ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25வது கூட்டத் தொடரில் அமெரிக்க அரசு, இங்கிலாந்து, மாண்டிநீரோ, மாசிடோனியா, மொரிசீயÞ ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு முழு நீதிக்கான அழுத்தம் குறைக்கப்பட்டது.
எனினும் இத்தீர்மானம் நேற்றைய தினம் 2014 மார்ச் 27 ல் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது, பாகிஸ்தான் அரசின் பிரதிநிதி, இந்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தியாவும், சீனா, கியூபா, ரஷ்யாவும் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து வாக்கு அளித்தன. எனினும் நீதியின்பால் தாகமுள்ள பல நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக வாக்கு அளித்ததால், அக்கோரிக்கை மனித உரிமை கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து பாகிஸ்தான் அரசு இன்னொரு அக்கிரமத்தைச் செய்தது. அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளின் வரைவுத் தீர்மானத்தில் 10வது பத்தியில் உள்ள ஏ, பி, சி, மூன்று உட்பிரிவுகள் அடங்கிய பத்தாவது பத்தியின் வாசகங்கள் முழுமையாக தீர்மானத்தில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
10ஆவது பத்தி கூறுவது இதுதான்:
இலங்கையில் நீதிக்கான நம்பகமான விசாரணை உள்நாட்டு அளவில் நடைபெறாத சூழலில், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது குறித்துச் சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் தந்துள்ள பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இலங்கையில் மனித உரிமைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சிங்கள அரசே நியமித்த நல்லிணக்க ஆணைய விசாரணை நடத்தியதாகச் சொல்லும் கால கட்டத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மனித உரிமை கவுன்சிலின் 27 வது கூட்டத் தொடரில் வாய்மொழியாக மனித உரிமை ஆணையர் அறிக்கை தர வேண்டும். 25வது கூட்டத் தொடரில் இப்பொழுது நிறைவேற்றப்படும் தீர்மானம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விவாதித்து, எழுத்து மூலமாக ஒரு விரிவான அறிக்கையை 28 வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு நீதிக்கான வெளிச்சத்தை தர முற்பட்ட இந்த பத்தாவது பத்தியை முழுமையாக நீக்க வேண்டும் என்று நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்களக் கொலைகார அரசுக்குக் கைக்கூலியாக பாகிஸ்தான் அரசு கொண்டு வந்த அயோக்கியத்தனமான இந்தக் கோரிக்கை மீது, மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்து, சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஓட்டுப்போட்டது. எனினும் உலகில் நீதி செத்து விடவில்லை என்பதால், ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்த்துப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்துத் தோற்கடித்தன.
அதன்பின்னர் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்க அரசின் தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகள் ஓட்டுப்போட்டன. கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, பாகிÞதான், பெலாரஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன.
வாக்கெடுப்பில் பங்கு ஏற்காமல், பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன் ஏமாற்று வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டது. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்கா தனது அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்:
அமெரிக்கத் தீர்மானம், இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்து உள்ளது. இலங்கை அரசு ஆக்கபூர்வமான புனரமைப்பு வேலையைச் செய்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2009, 2012, 2013 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது’ என்கிறார் இந்த யோக்கிய சிகாமணி.
1970 ஆம் ஆண்டில், பாகிÞதானின் ஒரு பகுதியான கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திர வங்கதேசம் வேண்டும் என்று முஜிபுர் ரகுமான் தலைமையில் கிழக்கு வங்காள மக்கள் போராடியபோது, முக்தி வாகினியை ஆதரித்து இந்தியத் தளபதி மானக்ஷா தலைமையில், இந்திய இராணுவத்தை கிழக்கு பாகிÞதானுக்குள் அனுப்பி, பாகிஸ்தான் இராணுவத்தோடு போர் புரிந்து, தோற்கடித்து, பாகிஸ்தான் இராணுவத்தினரை கைதாக்கிச் சரணடையச் செய்து, சுதந்திர வங்கதேசத்தை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அமைத்துத் தந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, அனைத்துலகத்தின் மனித உரிமைகள் பிரச்சினை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த வரலாறு சோனியா காந்தியின் கைப்பாவையான மன்மோகன் அரசுக்கு மறந்துவிட்டதா? அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புத்தி பேதலித்துவிட்டதா?
1983 ஆகஸ்ட்16 ல், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வகுடிமக்கள் என்று அறிவித்ததை அறியாத முட்டாள்களின் அரசா இன்றைய காங்கிரஸ் அரசு.
2009ம் ஆண்டு மனிதகுல வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை மே 17, 18 தேதி வரை நடத்தப்பட்ட பிறகு, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சிலின் அவசரக் கூட்டத்துக்கான தாக்கீதை எழுத்து மூலமாகத் தந்ததால், 2009 மே 26ம் தேதி, மனித உரிமை கவுன்சில் அவசரக் கூட்டம் கூடியது.
ஆனால், அனைத்துலகத்தின் நீதி பகிரங்கமாகத் தூக்கில் இடப்பட்டது போல, கவுன்சிலில் உறுப்பினர் அல்லாத சிங்கள அரசு தன்னைத்தானே பாராட்டித் தயாரித்த தீர்மானத்தை கியூபாவும், இந்தியாவும் வரிந்துகட்டிக் கொண்டு ஆதரவைத் திரட்டி, நிறைவேற்றியபோது, இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் தமிழ் இனக்கொலை செய்ததற்காக மகிந்த ராஜபக்சே அரசுக்குக் கிரீடம் சூட்டிய தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.
12 நாடுகள் இப்பாராட்டுத் தீர்மானத்தை எதிர்த்து வாக்குப்போட்டன. மொத்தம் உள்ள 47 நாடுகளில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அப்பொழுது மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க நாடு உறுப்பினர் அல்ல.
தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க முடியாத துரோகத்தை அன்றும் செய்த இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஊர் ஊராகச் சென்று என் மனக்குமுறலை மேடைகளில் கொட்டினேன். “ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என நான் தயாரித்த குறுந்தகட்டில் மேற்கூறிய செய்தியை ஆவணம் ஆக்கினேன்.
இந்திய அரசின் பிரதிநிதி 13 வது சட்டத் திருத்தம் பற்றி உளறி இருக்கிறார். 1987 ல் விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து, ஜெயவர்த்தனவோடு இணைந்து ராஜீவ் காந்தி போட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றிச் சொல்லப்பட்டது. ஒப்பந்த மையின் ஈரம் உலர்வதற்குள் ஜெயவர்த்தன இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றார். ராஜீவ் காந்தி அரசு வாய்மூடி பதுங்கியது. 13 வது சட்டத் திருத்தத்தை அப்போதே ஈழத் தமிழர்கள் ஏற்கவே இல்லை.
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் கொழும்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, இந்திய அரசு அதனை எதிர்த்து முணு முணுக்கக்கூட இல்லை. அப்படியானால், இந்திய அரசு தன்நினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டதா? என்பதே கேள்வி ஆகும்.
ராஜீவ்காந்தி பிரதமரானதில் இருந்து நேற்று வரை, காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்வதற்குக் காரணம் என்ன?
ஒரே ஒரு காரணம்தான். கடந்த பத்து ஆண்டுகளாக நான் கூறிவரும் காரணம்தான். ஈழத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி என்பதே அக்காரணம் ஆகும்.
நீர்த்துப்போன தீர்மானம் என்று நான் குறை கூறியபோதிலும், உலகில் நீதி மரித்துப் போகவில்லை என்பதால், சிறிதளவாவது நீதிக்கான நகர்வாக அமெரிக்க வரைவுத் தீர்மானம், ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.
உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழ்க்குல மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இனி மேற்கொள்ள வேண்டிய சூளுரை ஒன்றுதான். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்ச அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய காங்கிரஸ் அரசையும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.
ஈழத் தமிழர் தாயகத்தில், சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, இராணுவமும், போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒரு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.
2011 ஜூன் 1 ம் தேதி பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிட அரங்கில் நான் முதன்முதலாகப் பிரகடனம் செய்ததுபோல், அகிலத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பில் அவர்கள் வாழும் நாடுகளிலேயே பங்கு ஏற்கும் நிலையை ஐ.நா.மன்றம் ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் இனப்படுகொலை செய்த சிங்கள அரசையும், கூட்டுக் குற்றவாளியான இந்தியக் காங்கிரஸ்  அரசையும் அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
தமிழ் ஈழ விடுதலைக்காக செங்குருதி சிந்தி உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் மீது ஆணை! சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் மீது ஆணை! ஈழத் தமிழரைக் காக்க மரணத் தீயை தழுவிய முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை உயிர்த் தியாகம் செய்த உத்தமர்கள் மீது ஆணை!
அறம் வெல்லும்! தமிழர்களுக்கான நீதி கிடைக்கும்!  நாளைய பொழுதில் தமிழ் ஈழம் மலரும்! 
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWio1.html
இலங்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சீமான்-தமிழருவி மணியன் கண்டனம்!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 09:40.02 AM GMT ]
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காத மத்திய அரசுக்கு சீமான் மற்றும் தமிழருவி மணியன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழர் ஆலுவலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில், ''ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பின் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நமக்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஒரு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது.
போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தினால் இந்தியா செய்த உதவிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பயந்தே மத்திய அரசு அதனை புறக்கணித்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணைக்கு பிறகு தனி ஈழம் உருவாக வழிபிறக்கும்'' என்றார்.
காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ''தமிழகர்களுக்கு துரோகம் செய்வதையே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இதற்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. எப்போதும் போல இப்போதும் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது'' என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWioz.html
ஐ.நாவில் இந்தியாவின் அணுகுமுறை தலைகுனிய வைத்துள்ளது: கொந்தளிக்கும் கருணாநிதி
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 07:33.58 AM GMT ]
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.
தீர்மானம் நிறைவேறியதால் ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அடுத்த நகர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் நமக்கு ஓரளவு மன நிறைவு என்ற போதிலும், அந்தத் தீர்மானத்தின் போது இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறை, தமிழகத்திலே உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தையும் மீண்டும் ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
நேற்றையதினம் (27-3-2014) ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து இருக்கின்றன. 11 நாடுகள் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக்கணித்திருக்கின்றன. அப்படி புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலக சமுதாயத்தின் முன் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டிய பரிதாபமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக சம்பந்தமோ, பந்தபாசமோ இல்லாத அமெரிக்கா போன்ற ஒரு நாடு, சர்வதேச சமூகத்தின் நலன், மனித நேயம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானத்தை மூன்றாவது முறையாக முன்மொழிந்து, அந்தத் தீர்மானத்தை தமிழினத்தின் வேர்களைக் கொண்டிராத 23 நாடுகள் ஆதரிக்கும் நிலையில், தமிழர்களின் தாயகமான இந்தியா அந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பது தான் பெற்ற தாயே தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்வதற்குச் சமமாகும் என்பதால் நம்முடைய கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றது.
மேலும் சொல்ல வேண்டுமேயானால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, “இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலே நேரடி விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று மனிதாபிமான உணர்வோடு தெரிவித்திருக்கும் நிலையில்,
ஐ.நா. வுக்கான நம்முடைய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா என்பவர் “ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்துள்ளது. இது போன்ற அணுகுமுறைகளை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது” என்று கருத்து தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரசாரே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பிறநாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால், பண்டித நேரு தென் ஆபிரிக்காவின் நிற வெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா?
வங்காள தேசத்தில் விடுதலை வீரர் முஜிபுர் ரகுமானுக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையிலான கேள்விகளை உலகத் தமிழர்கள் எழுப்ப மாட்டார்களா என்பதை மத்திய காங்கிரஸ் அரசு எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்திய அரசு தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வராததோடு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது, குதிரை குப்புறத் தள்ளிய தோடு, குழி பறித்த கதையாகவும் ஆகி விட்டது.
சர்வதேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், முக்கியமான இந்தப் பிரச்சினையில் மனித நேயமற்ற முடிவினை மேற்கொண்டதற்காக இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjx0.html

Geen opmerkingen:

Een reactie posten