அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்காமை குறித்து தாம் அதிர்ச்சியடைந்திருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றே முன்பிருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும் இறுதி நேரத்தில் இந்தியா இவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டமை அதிர்ச்சியளிக்கிறது.
இது தொடர்பில் தமிழ் நாட்டு மக்களும் அரசியல் தலைவர்களும் அதிருப்தியில் உள்ளனர் என்பதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரியப்படுத்தி இருப்பதாகவும் ஜீ.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten