தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: பெருமிதமாக உள்ளது என்கிறார் கமரூன்!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:55.35 AM GMT ]
இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேறியது. இதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் வரவேற்றுள்ளார்.
மேலும்,  மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற இத்தனை வருடங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய இலங்கை மக்களுக்கு இது ஒரு வெற்றி.
இலங்கை அரசு போர் குற்ற விசாரணை மீதான தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதன் விளைவாகவே இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது.
அதிபர் ராஜபக்ச சர்வதேச விசாரணை எனும் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையின் கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என நம்புகிறேன்.
இந்த தீர்மானத்தின் வெற்றிக்கு பிரிட்டனின் பங்களிப்பு குறித்து பெருமிதமாக உள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjvy.html

மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:37.38 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை நடத்த இத்தீர்மானம் வழியமைத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா, வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கையை ஆதரித்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா உள்ளிட்ட மற்ற 12 நாடுகளும் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிகொண்டன. ஒதுங்கிக் கொண்ட நாடுகளில் எதியோப்பியா, குவைட், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அடக்கம்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக தீர்மானத்தை முன்வைக்கும் நாடுகள் சார்பில் பேசிய அமெரிக்கா, இலங்கை மீதான விசாரணையை மனித உரிமைகள் உயர் ஆணையர் ஏற்கவேண்டும் என்ற தீர்மானத்தின் கோரிக்கையை முன்மொழிந்தார்.
இரண்டு தரப்பினராலும் புரியப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது' என்றார் அமெரிக்கப் பிரதிநிதி.
இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றியும் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியுள்ளது.
இலங்கை இந்தத் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அபாயகரமான முன்னுதாரணமாக அது அமைந்துவிடும். அதாவது இந்த ஆணையத்தின் நடைமுறைகளை மீறி குறுக்கு வழிகளில் தங்களின் வேலைகளை முன்னெடுத்துச் கொள்வதற்கு சில நாடுகளுக்கு வழிகிடைத்துவிடும்' என்றார் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க.
தீர்மானத்தில் பொருத்தமான நிபுணர்கள் தொடர்பில் கூறப்படுகின்ற ஏற்பாடு தெளிவின்றி இருப்பதாக் கூறிய இலங்கைப் பிரதிநிதி, அதன்மூலம் மூன்றாவது தரப்பு சக்திகள் இலங்கையின் விவகாரத்தில் நுழைந்து விடுவதற்கும் கதவுகள் திறக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பம் முதலே இலங்கைக்காக முன்னின்று குரல் கொடுத்துவந்த பாகிஸ்தான் இன்றும் அந்தப் பணியைச் செய்தது.

இலங்கை மீது இந்த தீர்மானத்தைக் கொண்டு வருகின்ற நாடுகளின் சொந்த மனித உரிமை விவகாரங்களைப் பார்த்தால் அவர்களுக்கு இலங்கை மீது பொறுப்பு சுமத்த முடியாது. அந்த நாடுகள் இங்கு மற்றவர்களின் பிரச்சனைகளில் நீதிபதிகளாக இருக்க முடியாது என்றார் பாகிஸ்தானிய பிரதிநிதி.
இம்முறை ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆரம்பம் முதலே காத்துவந்த மெளத்தை இந்தியா இன்று போட்டு உடைத்தது.
வரம்பு கடந்த அதிகாரத்துடன் கூடிய வெளிநாட்டு விசாரணை பொறிமுறைகளை அமைப்பது என்பது, 2006ல் இந்த மனித உரிமைகள் ஆணையம் உருவாகக் காரணமாக இருந்த பொதுச் சபை தீர்மானத்தின்படி, பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு என்கின்ற இந்த ஆணையத்தின் தேவையை பிரதிபலிப்பதாக அமையவில்லை. அதனால் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றார் இந்தியப் பிரதிநிதி.
வாக்கெடுப்பு நிலைக்கு சபை வந்தபோது, இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டது.
ஆனால், ஆணையத்தின் பொதுவான பட்ஜெட்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்க வழிசெய்யப்படும் என்றும் நிதி விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் இலங்கை மீதான தீர்மானத்தை தாமதப்படுத்தும் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் வாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்ட்டது.
இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு வழிசெய்யக்கூடிய தீர்மானத்தின் 10-வது பந்தியை நீக்க வேண்டும் என்று கோரிய இலங்கைக்கு ஆதரவான கோரிக்கையும் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWju7.html

Geen opmerkingen:

Een reactie posten