தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 maart 2014

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய தமிழர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலில் காயம்!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு கடந்த வருடம் படகு மூலம் சென்றுள்ளார்.

தற்போது அவர் அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் இலங்கைகு அனுப்பப்பட்டு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார்.திடீரென நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை செய்ய வேண்டும் உடன் வரவும் என அழைத்துக் கொண்டு கொழும்பிலே வைத்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது,அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
30 Mar 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1396167232&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten