[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 12:16.42 PM GMT ]
இன்று குராம் ஷேக் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு உயர் நீதிமன்றில் ஆரம்பமானது.இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவருடைய தம்பி நசீரும் ரஷ்ய நாட்டு காதலியுமான விக்டோரியாவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதன்போது, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வெல்கம உத்தரவிட்டார்.
ஏனைய சந்தேக நபர்கள் ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தபோதும், இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான தங்காலை பிரதேச சபையித் தலைவர் சம்பத் விதானபத்திரன விளக்கமறியலில் வைக்கப்பட்டிரு்நதார். எனினும் இன்று 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு, தங்காலையில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினரான குராம் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது காதலியான விக்டோரியா அலெக்ஸ்சான்ராவ்னா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியமளிக்க விக்டோரியாவை பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
தனது சகோதரனின் கொலை வழக்கு தெடர்பான பாரம் குறைந்துள்ளதாக குராம் ஷேக்கின் சகோதரர் நசீர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு விசாரணைக்கான திகதிக்காக காத்துக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkwz.html
கிளிநொச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 11:48.31 AM GMT ]
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த 2013 ம் ஆண்டிற்கான மின் கட்டணம், வாடகைப் பணம், வரிப் பணம் ஆகியவற்றை செலுத்தாத 30 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டிருந்தார் என கரைச்சி பிரதேச சபை செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று புதன்கிழமை வர்த்தகர்களுக்கும் பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற செய்தியாளரை பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்கியுள்ளார் என பொலிஸார் கூறினர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkwy.html
Geen opmerkingen:
Een reactie posten