தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை



இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த இந்தியா வகை செய்ய வேண்டுமென கோரி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மேலும், இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்யக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தோழர் கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழகம், தோழர் கோவை இராமகிருஷ்ணன் தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்,
சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlx1.html

Geen opmerkingen:

Een reactie posten