ஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் ஐ.நா.முன்றலில் புலம்பெயர் சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து ஐ.நா.வுக்கு எதிராகவும் அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். குறிப்பாக இத்தாலியில் இருந்து கூடுதலான சிங்கள மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தினால் ஐநாவில் செய்தி சேகரிப்பதில் ஈடுபட்ட லங்காசிறி ஊடகவியலாளர்களை ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தடுத்துள்ளனர். இதனைக் கண்ட சுவிஸ் பொலிஸார் லங்காசிறி செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.
ஐ.நா.வில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பயங்கரவாதி என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
ஐ.நா.வில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பயங்கரவாதி என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
அவ்வேளையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் பலர் சென்றவேளையில் சிங்கள ஊடகவியலாளர்களை மட்டும் புகைப்படம் எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதித்ததோடு, லங்காசிறி ஊடகவியலாளர்களை அனுமதிக்காமல் தடையை ஏற்படுத்தினர்.
இதனை அவாதனித்த சுவிட்சர்லாந்து பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்ட லங்காசிறி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கி செய்தி சேகரிப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கினர். இதனை அவதானித்த ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் `கொட்டியா கொட்டியா` ('புலிகள் புலிகள்') என கோசமிட்டு கடுந்தொனியில் குரல் எழுப்பியுள்ளனர்.
முழுமையாக செய்தி சேகரிப்பதற்கு சுவிஸ் பொலிசார் பாதுகாப்பு வழங்கியமை பாராட்டத்தக்கதொன்றாகும்.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு எதிரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிங்களவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவானர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும், ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ள இலங்கை - ஐரோப்பா நட்புற அமைப்பு, இலங்கை 60 வருடங்களாக ஐ.நாவின் உறுப்பு நாடாக இருந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் 4 ஆயிரத்து 200 பேர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இலங்கையில் தாம் வெளிநாட்டு அழுத்தங்களுடன் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளும் அதன் நிறுவனங்களும் இது குறித்து நியாயமான வகையில் ஆராய்ந்து பார்க்கும் என நம்புவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten