இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் விளைவாக, அமெரிக்காவின் பிரேரணை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான விசாரணை ஒன்றை வலியுறுத்திய பிரேரணையின் இறுதி வடிவம் நேற்று திங்கட்கிழமை உறுப்பு நாடுகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமை முன்வைக்கப்படவுள்ளது.
இதில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கோரப்பட்டுள்ளது.
எனினும் இந்த சுயாதீன விசாரணையை, குறிப்பிட்ட கால வரையறை ஒன்றுக்குள் உள்ளடக்குமாறு, இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் இந்த விசாரணையை நடத்த அமெரிக்க அரசாங்கம் இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயமும் உள்ளடக்கப்பட்ட பிரேரணையே எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
http://news.lankasri.com/show-RUmsyDRYLWko4.html
Geen opmerkingen:
Een reactie posten