தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 maart 2014

ஜெனிவாவில் இலங்கைத் தூதரகத்தில் நடந்தது என்ன விபரிக்கிறார் சுமந்திரன் MP

ஜெனிவாவில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அங்குள்ள சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியப் பேச்சு நடத்தியதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில், ஐ.நாவுக்கான பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவை சந்தித்திருந்த போதிலும், இரகசியப் பேச்சு நடத்தியதாக உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல் எந்த அடிப்படையுமற்றது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்கத தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஐ.நாவுடன் இணைங்கிச் செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை தாம் கேட்டுக் கொண்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் தம்முடன் இந்த சந்திப்பில் பங்கேற்றதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற கைதுகள் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பின் போது, தாம் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரிய சிங்க இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிடுகையில், இது நட்புரீதியான ஒரு சந்திப்பு தவிர வேறேதுவுமில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 17ம் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன், சந்திக்க வருவதற்கு சுமந்திரன் அனுமதி கோரினார்.
“இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு.
சுமந்திரன் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள சிறிலங்கா தூதுவரை சந்திப்பது வழக்கம்.
சுமந்திரனைச சந்தித்த போது , ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கெடுக்கும் சிறிலங்கா பிரதிநிதிகள் பலரும் என்னுடன் இருந்தனர்.
அது ஒரு இயல்பான சந்திப்பு மட்டுமே” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/63900.html

Geen opmerkingen:

Een reactie posten