தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

முல்லைத்தீவு காடுகளில் மீண்டும் தேடுதலை ஆரம்பித்துள்ள இராணுவம்(படம்)

முல்லைத்தீவு கடல் பகுதி ஒன்றில், உரிமை கோரப்படாமல் காணப்பட்ட படகு ஒன்றை, இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இப் படகு கரையொதுங்கிய சில மணி நேரத்தில் அவ்விடத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை முல்லைத்தீவில் உள்ள சில அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இலங்கை இராணுவம் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

குறித்த படகு இந்திய மீனவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளபோதும், அதில் யாராவது வந்து கரையிறங்கியிருக்கலாம் என்ற சந்தேகமே இலங்கை இராணுவத்திற்கு உள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் இங்கே யாராவது நடமாடினார்களா என்று இலங்கை இராணுவம் அவ்வூர் மக்களை நேற்று(வியாழன்) மாலை விசாரித்துள்ளார்கள் என்றும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது. 

ஜெனீவாவில் மாநாடு நடைபெறும்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா ? இல்லை மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அதுபோல, பார்பது எல்லாம் புலிகள் போலத் தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எதனைப் பார்த்தாலும் இலங்கை இராணுவத்திற்கு புலிகளைப் பார்பதுபோல இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புலப்படுகிறது.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6601

Geen opmerkingen:

Een reactie posten