இலங்கை படையில் இணைக்கப்பட்ட வீராங்கனைகளை பயிற்சியின் போது இராணுவ பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாக வெளியான வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது
இந்த வீடியோ காட்சிகள் யூடிப்பில் வெளியான நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு அநுரதபுரத்தில் வைத்து புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இராணுவத்தில் தண்டனைகள் இருக்கின்ற போதும் குறித்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட தண்டனையை போல உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten