தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 maart 2014

இலங்கை தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முயற்சி: கரன் பாக்கர்

தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர் ஒருவர் கொலை தொடர்பில் மூன்று வருடங்களின் பின் 4 பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 04:33.07 PM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை 2010ம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் உட்பட நான்கு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்யதுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை இவர்களை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
தன்னாமுனை களப்பு பகுதியில் 23-01-2010 அன்று கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினராக அரவிந்தன் என்பவரது சடலம் மீட்க்கப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தன்னாமுனையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டவர் உட்பட மேலும் இருவரை கைதுசெய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போது கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளராக முன்னர் செயற்பட்டுவந்த வசந்தகுமார் என்பவர் கழுத்தினை அறுத்து கொலை செய்தது தொடர்பிலான தகவல்கள் தெரியவந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கும் வசந்தகுமாருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினை தொடர்ந்து குறித்த நபரை தனியாக அழைத்து அவரை தாக்குதவதற்காக மூன்று இளைஞர்களுக்கு வசந்தகுமார் என்பவர் மதுவாங்கிக் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தொலைபேசியில் தன்னாமுனை ஆற்றங்கரைக்கு அரவிந்தன் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு வைத்து ஏனைய மூன்று இளைஞர்களும் அரவிந்தனை தாக்கிய போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தனை வசந்தகுமார் என்பவர் வெட்டியுள்ளதாக விசாரணையின் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகரவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் பெரேரா தலைமையில் சென்ற சுகியான் (61217), பிரியங்க (66427), மஜித் (80044), செல்வம் (67995)  ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினரே மேற்கொண்டு வந்தனர்.
இதன்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நேற்று சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்தனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWls3.html


இலங்கை தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முயற்சி: கரன் பாக்கர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 01:12.36 PM GMT ]
இலங்கை நாட்டின் இறையாண்மை எனக் கூறி லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட பொறுப்பில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக மனிதாபிமானத்திற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஸ்தாபகர் கரன் பாக்கர் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் இலங்கையில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பாக்கர், சான் பிரான்சிஸ்கோவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் சட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் துணை ஆணைக்குழுவான மனித உரிமை ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஆணைக்குழுவில் பணியாற்றி வருகிறார்.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWlr1.html

Geen opmerkingen:

Een reactie posten