தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 maart 2014

பெண் சிப்பாய்களின் துன்புறுத்தல்: மறைந்திருக்கும் மர்மம் என்ன ?

சில தினங்களுக்கு முன்னர் பெண் சிப்பாய்கள் சிலரை, இலங்கை இராணுவம் துண்புறுத்துவதுபோன்று வெளியான வீடியோவைப் பலர் பார்த்திருப்பீர்கள். இதனை முதலில் சிங்கள இணையம் ஒன்று வெளியிட அதனை அப்படியே எடுத்து பல தமிழ் இணையங்களும் பிரசுரித்துவிட்டது. (அதிர்விலும் வீடியோ வெளியாகியது) . ஆனால் இதன் பின்னால் சில மர்மங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த வீடியோவில் இருக்கும் பெண்கள் அனைவரும் சிங்களப் பெண்கள் ஆவர். ஏன் எனில் இந்த காணொளியில் அழுகின்ற பெண்கள் சிங்களத்தில் "அணே" என்று தான் கத்துகிறார்கள். ஆனால் சில தமிழ் இணையங்கள் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் சித்திரவதை செய்வதாகவும் செய்திகளை வெளியிட்டு விட்டார்கள்.

இது இவ்வாறு இருக்க, இலங்கை இராணுவமானது தாம் அவர்களை உடனே கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர்களுக்கு தண்டனை வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது நேற்று தடாலடியாக அறிவித்துள்ளது. இதுவே மேலதிக சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுடும் காட்சி, இசைப்பிரியாவின் காட்சி, கேணல் ரமேஷ் அவர்களின் காட்சிகள் அடங்கிய எத்தனையோ வீடியோக்கள் வெளியாகியது. ஆனால் அது அனைத்தும் போலியானவை என்று கூறிய இலங்கை இராணுவம், இந்த வீடியோவை மட்டும் எவ்வாறு ஏற்றுக்கொண்டது ? அதுவும் ஜெனீவாவில் மனித உரிமை மாநாடு நடைபெறும் வேளையில் இவ்வாறு இலங்கை இராணுவம் சொல்லக் காரணம் என்ன ?

அதாவது தாம் குற்றம் இழைத்த இராணுவத்திற்கு தண்டனை வழங்குகிறார்கள் என்று, உலகிற்கு காட்டிக்கொள்ளவே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது என நம்பப்படுகிறது. தாமாகவே ஒரு வீடியோவை சிங்கள இணையம் மூலம் கசிய விட்டு பின்னர், அதனை பிரபல்யமாக்கி அதன் பின்னர் தாம் குற்றம் புரிந்த இராணுவத்தை கைதுசெய்து தண்டனை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள் இலங்கை இராணுவத்தினர். இது தமிழர்கள் தலையில் மட்டும் அல்ல, சர்வதேசத்தின் தலையிலும் முளகாய் அரைக்கும் செயலாக உள்ளது. எனவே இவ்வாறு திடீர் தீடீர் என்று வெளியாகும் வீடியோக்களை நாம் அவதானிக்கும்போதும், செய்தியாக வாசிக்கும்போதும் அதில் கவனம் இருப்பது நல்லது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6570

Geen opmerkingen:

Een reactie posten