நேற்றைய தினம் மாலை(28) இலங்கை வில்கமுவ என்னும் இடத்தில் சிங்கள இளைஞரது சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளார்கள். 2 பிள்ளைகளின் தந்தையான இவர் இரவு நேரம் வீட்டில் இருந்து பொருள் ஒன்றை வாங்க வெளியே சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சிங்களவர் மேல் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து நெருப்பு பற்றிக்கொண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் பொலிசாருக்கு அழைப்பு விடுத்து பொலிசார் அவ்விடம் வருவதற்கு முன்னதாகவே உடல் கருகி இச் சிங்களவர் இறந்துவிட்டார். மோட்டார் சைக்கிள் எப்படி தானாக நெருப்பு பற்றிக்கொள்ளும் ? அத்தோடு அப்படி நடந்தால் ஏன் குறித்த அந்த நபர் எழுந்து ஓடவில்லை ? இல்லையென்றால் கூக்குரல் எழுப்பவில்லை என்பது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகிறார்கள்.
இதேவேளை குறித்த இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை சிலர் தாக்கி நிலத்தில் தள்ளிவிட்டு பின்னர் எரியூட்டியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. படங்கள் இணைப்பு.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6609
Geen opmerkingen:
Een reactie posten