தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!- சர்வதேச மன்னிப்பு சபை

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவரின் ஒத்துழைப்பு அவசியமில்லை!– சிறிபால டி சில்வா
[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 11:58.13 PM GMT ]
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு மக்களின் ஒத்துழைப்ப அவசியமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு மாமாக்களோ, சித்தப்பாக்களோ அவசியமில்லை.
உள்நாட்டு பிரச்சினையொன்றுக்கு சர்வதேச ரீதியான தீர்வு திட்டமொன்றை எட்ட வேண்டிய அவசியமில்லை.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியான தீர்வுத் திட்டமொன்றை தேடினால் அது நாட்டின் இறையாண்மையைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும்.
நல்லிணக்க முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நிலைமைகளையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைப்பதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRbLWju2.html
தேர்தலில் சாதிக்க முடியாத ஆட்சி மாற்றத்தை சர்வதேச அழுத்தத்தில் சாதிக்க பார்க்கிறார்கள்!- அமைச்சர் ஜீ.எல்.
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:03.44 AM GMT ]
உள்நாட்டு தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத நாடுகள், சர்வதேச அழுத்தங்களின் ஊடாக அதனை சாதித்துக் கொள்ள முற்படுவதாக  இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதன் பின்னர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே சில நாடுகள் செயற்படுகின்றன.
இதற்காகவே அமெரிக்கா தமது பிரேரணையை முன்வைத்திருக்கிறது.
இந்த பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா சில நாடுகளை மிரட்டி இருக்கிறது.
செய்வதற்கு வேறு தெரிவுகள் இல்லாத நிலையிலேயே இந்த பிரேரணைக்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWju3.html


சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!- சர்வதேச மன்னிப்பு சபை
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:13.01 AM GMT ]
இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பு செயற்பாடுகளை கைவிட்டுவிட்டு, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
மன்னிப்பு சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையானது, இலங்கையில் பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஏலவே இரண்டு மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை நிராகரித்துள்ளது.
இந்தமுறையும் அவ்வாறு செயற்படாமல், சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWju4.html

Geen opmerkingen:

Een reactie posten