தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 maart 2014

ஐ.நா.வில் திரையிடப்பட்ட ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது'

ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' திரையிடப்பட்டது.

இந்த ஆவணப்படம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும், போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மகா பிரபாகரன் அவர்களால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் வந்து ஆவணப்படத்திற்கான தகவல்களை சேகரிக்கும் போது தமிழ் மகா பிரபாகரன் இராணுவத்தினரால் கைது செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வில் மீண்டும் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 25 வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு உப மாநாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்னை தொடர்பாக நடக்கின்றன.

அப்படி இலங்கை மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக நேற்று அறை எண் 22 யில் உபமாநாடு ஒன்று நடைப்பெற்றது. அதில் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னான்டோ, சுனந்த தேசப்பிரிய, பாதர் போன்ட்காலன்ட் உள்பட ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இந்தியாவை சேர்ந்த மனித உரிமையாளர்களும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் இறுதியாக இலங்கையில் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது” ஆவணப்படம் திரையிடப்பட்டது.

பிரித்தானியா பாராளமன்றத்தில் ஜனவரி மாத இறுதியில் இப்படம் வெளியான போதே அதிலிருந்த காட்சிகளும் பேட்டிகளும் இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியது.

சில நாட்களுக்கு இப்படத்திலிருந்த இராணுவ சிப்பாயின் பேட்டி இந்தியாவின் ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒன்றில் வெளியாகி இருந்தது.

அதில் இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மக்கள் படுகொலைகள் தொடர்பாகவும் ஆதாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதோடு இன்றைய வட கிழக்கின் இராணுவமயமாக்கலை உள்ளடக்கிய காட்சிகளே இன்று ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடந்த உபமாநாட்டில் திரையிடப்பட்டது. — with Rajathurai Pratheepan.

my opinion:ஈழத்தமிழரின் துயரை யார் வெளிக்கொணர்ந்தாலும் அவர் மனிதஉரிமையை மதிப்பவரே,உண்மையானவரே!!!ஆனால் இலங்கைக்கு வேண்டப்படாதவர்,அதனால் காங்கிரசுக்கும் இந்தியாவுக்கும் அவர் எதிரி!!
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkv3.html

ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம் திரையிடப்பட்டது!
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 10:15.03 AM GMT ]
ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும், போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மகா பிரபாகரன் அவர்களால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் வந்து ஆவணப்படத்திற்கான தகவல்களை சேகரிக்கும் போது தமிழ் மகா பிரபாகரன் இராணுவத்தினரால் கைது செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வில் மீண்டும் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 25 வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு உப மாநாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்னை தொடர்பாக நடக்கின்றன.
அப்படி இலங்கை மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக நேற்று அறை எண் 22 யில் உபமாநாடு ஒன்று நடைப்பெற்றது. அதில் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னான்டோ, சுனந்த தேசப்பிரிய, பாதர் போன்ட்காலன்ட் உள்பட ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இந்தியாவை சேர்ந்த மனித உரிமையாளர்களும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் இறுதியாக இலங்கையில் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பிரித்தானியா பாராளமன்றத்தில் ஜனவரி மாத இறுதியில் இப்படம் வெளியான போதே அதிலிருந்த காட்சிகளும் பேட்டிகளும் இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியது.
சில நாட்களுக்கு இப்படத்திலிருந்த இராணுவ சிப்பாயின் பேட்டி இந்தியாவின் ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒன்றில் வெளியாகி இருந்தது.
அதில் இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மக்கள் படுகொலைகள் தொடர்பாகவும் ஆதாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதோடு இன்றைய வட கிழக்கின் இராணுவமயமாக்கலை உள்ளடக்கிய காட்சிகளே இன்று ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடந்த உபமாநாட்டில் திரையிடப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten