[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:18.37 PM GMT ]
ஜெனிவாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தானும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திரவதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சகல நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நாட்டின் நிலைமைகள் பற்றி விளக்கமளித்திருந்தோம்.
26 ஆம் திகதி இரவு வரை மூன்று முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தன.
இறுதி நேரத்தில் அந்நாடுகள் தமது முடிவை மாற்றிக்கொண்டமை எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஜனாதிபதியும் நாடு அடைந்த வெற்றி என்றும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWio6.html
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் இந்தியா புறக்கணித்தது?: வெளியுறவுத்துறை விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 12:25.23 PM GMT ]
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.
இந்த தீர்மானம் 23 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டபோதிலும், இந்தியா இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.
அவ்வாறு சர்வதேச விசாரணை கோருவது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், அது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கும் என்றும் மாநாட்டில் பேசிய இந்திய பிரதிநிதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சிகள் இன்று கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங், தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததாக கூறினார்.
மேலும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததால்தான், தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் கச்சதீவு இந்தியப் பகுதி அல்ல என்றும், அது இலங்கைக்கு சொந்தமானது என்றும் கூறிய சுஜாதா சிங், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் இருநாட்டு மீனவர்கள் பேச்சுக்கான தேதி பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWio7.html
சகல இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 03:38.02 AM GMT ]
இதன்படி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட காரணத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு, இந்தியா நேற்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் வாக்காளிக்காமல் விட்டமைக்கு நன்றிக்கடனாகவே கருதப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjv7.html
Geen opmerkingen:
Een reactie posten