தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

சட்டத்தின் முன் அனைவரும் சமமே!– மனித உரிமை ஆர்வலர்களின் கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு

கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படும் - த.தே.கூ
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 09:56.29 PM GMT ]
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 
உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் பிரேரணை தமிழ் மக்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறது என்று சொல்லமுடியாது.

எனினும் கொழும்பில் உள்ள தூதரகத்தின் ஊடாக வெளிநாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படும்.

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஆறுதல் கொள்ள கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

சட்டத்தின் முன் அனைவரும் சமமே!– மனித உரிமை ஆர்வலர்களின் கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 11:35.40 PM GMT ]
இலங்கையில் சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமமானவர்களே என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருக்கி பெர்ணாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மஹேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச அளவில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இலங்கையின் சட்ட விதிகளை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்வதுடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களை தண்டிக்கவும் அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten