[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 07:57.28 AM GMT ]
இதன் காரணமாகவே இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். ஜெனிவாவில் லங்காசிறி ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான விடயங்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள் உள்ளன.
இந்தியா எந்த மக்களையும் அடிப்படையாக கொண்டு இந்த முடிவை எடுக்கவில்லை. பிரேரணை தொடர்பிலேயே தனது தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தியா தீர்மானங்களை எடுக்கும் போது அதன் தேசிய நலன்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளும் என்றும் திலிப் சிங்ஹா குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjx1.html
நீதி விசாரணை சரியாக நடக்க ராஜபக்சவை பதவி நீக்க வேண்டும்! சர்வதேச நாடுகளிடம் திருமாவளவன் வேண்டுகோள்!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 08:36.00 AM GMT ]
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறேன்.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இந்தியா கருத்துத் தெரிவித்திருப்பது சர்வாதிகாரிகள் வழக்கமாகச் சொல்லும் காரணத்தை இந்திய அரசு வழிமொழிந்திருப்பது வேதனை அளிக்கிறது.
தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டுமெனில், இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து ராஜபக்ச நீக்கப்பட வேண்டும்.
அவரை அதிபராக வைத்துக்கொண்டு அங்கு நியாயமான விசாரணையை நடத்த முடியாது.
உண்மையிலேயே போர்க் குற்றங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென சர்வதேசச் சமூகம் எண்ணுமேயானால், ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWjx4.html
ஜெனிவா தீர்மானத்துக்கு இட்டுச் சென்ற இலங்கைப் போர்! - ஐநாவிலிருந்து 7 பேர் கொண்ட குழு விசாரணைக்கு வரும்!
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 03:04.54 PM GMT ] [ பி.பி.சி ]
அந்தப் போரில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
சர்வதேச மட்டத்திலான எந்தவொரு விசாரணையும் தமது நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
நீண்ட இலங்கைப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுத் தீர்மானம் தீர்வு தருமா?
ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் - பயங்கரம் என்கிறது ஐ.தே.க.
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும்.
நாங்கள் பல தடவைகள் புத்தி சொல்லியும் அவற்றை கண்டு கொள்ளாததன் பயனாக இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது
இனிமேலாவது சர்வதேசத்துடன் முரண்படாமல் புத்திசாலித்தனமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பிற்பாடு ஏழு பேரை கொண்டு குழு இலங்கைக்கு வருகை தந்து விசாரணையொன்றை மேற்கொள்ளும் இச்செயற்பாடானது மிகவும் பயங்கரமானது.
அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையொன்றை வேண்டி நிற்கிறது.
இலங்கை மீது சர்வதேசம் இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்கு அரசாங்கமே மூல காரணமாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWip2.html
காங்கிரஸ் அரசின் உண்மையான முகம் அம்பலம்: பாஜக
[ வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014, 01:10.36 PM GMT ]
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனை கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த இனப்படுகொலையை விசாரிக்க வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவான நிலையை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. இது தமிழர்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் மத்திய காங்கிரஸ் அரசு இருப்பதை தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசோடு கைகோர்த்து செயல்படும் காங்கிரஸ் செயல் கண்டிக்கத்தக்கது என பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRcLWip0.html
Geen opmerkingen:
Een reactie posten