தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 maart 2014

முதலமைச்சர் நியமனத்தில் இழுபறி!

மேல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில் ஆளும் கட்சிக்குள் அடுத்தக்கட்ட மோதல் ஆரம்பமாகியுள்ளது.
இந்த தேர்தலின் பின்னர் மேல் மாகாணசபையின் முதலமைச்சராக உதய கம்மன்பிலவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு முழுமையான அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகிறார்.
ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது. விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாரத லகஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர முன்னிலையில் உள்ளார். அவர் மொத்தமாக 139034 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆன போதும், கம்மன்பில 115638 விருப்பு வாக்குகளையே பெற்ற நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நேற்று கொழும்பு ரோயல் கல்லுரியில் வைத்து அவர்களின் வாக்குகள் எண்ணப்பட்ட போது, குழப்ப நிலை உருவாகி இருந்தது.
இதன் போது காவற்துறையினர் பாதுகாப்பினை அதிகப்படுத்தி பின்னர் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. எனினும் ஹிருனிக்காவே முன்னிலையில் உள்ளார்.
கம்மன்பிலவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவளிக்கின்ற ஆதேநேரம், ஹிருனிக்காவுக்கு மகிந்தராஜபக்ஷவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷ ஆதரவாக செயற்பட்டு வருகிறார்.
அத்துடன் ஹிருனிக்காவுக்கு ஜனாதிபதியின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரை மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதில் சிக்கல்களையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் என்று தெரியவருகிறது
http://www.jvpnews.com/srilanka/63875.html

Geen opmerkingen:

Een reactie posten