தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

ஆயிரக்கணக்கான பஹ்ரெய்ன் தினார் கொள்ளை: இலங்கையரை இன்ரர்போல் தேடுகிறது !

பஹ்ரெய்னில் பிரயான முகவர் நிலையத்தில் வேலைபார்த்த இலங்கை ஒருவர் பல ஆயிரம் தினார்களை, சூட்சுமமாக திருடிக்கொண்டு அன் நாட்டில் இருந்து தப்பிவிட்டார். இதனால் பல உல்லாசப் பயணிகள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதோடு மேலும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. மோசடியில் ஈடுபட்ட இவரை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக் கணக்கான பஹ்ரெய்ன் தினார்களை குறித்த இலங்கையர் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.விமான டிக்கட் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த 28 வயதான இலங்கையர் ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் பணத்தைப் பெற்றுக் கொண்ட குறித்த நபர், தப்பிச் சென்றுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார். சந்தேக நபரை கண்டு பிடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எனவே, சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, டுபாய் அல்லது வேறும் ஓர் நாட்டில் குறித்த நபர் தங்கியிருக்கலாம் எனவும் இதனால் சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சந்தேக நபர்களை கைது செய்ய முடியும் எனவும் நிறுவன உரிமையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மோசடி காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பணத்தை இழந்துள்ளதுடன் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6610

Geen opmerkingen:

Een reactie posten