2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் இறுதி ஒரு வாரத்தைப் போல, இந்த வாரம் இலங்கை அரசாங்கம் கழிக்கும் என்றும் சிறிலங்கா கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் அடாவடித் தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் ஒரு வார காலம் மாத்திரமே இருப்பதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த பிரேரணையில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை ஏறத்தாழ உறுதியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர முன்னெடுப்பு தோல்வி கண்டுள்ளதாகவும், இதனால் இந்த வாரம் இலங்கை அரசாங்கத்தக்கு அச்சம் மிக்கதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/63245.html

Geen opmerkingen:
Een reactie posten