தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 maart 2014

ஒத்திவைக்கும் முடிவு நிராகரிப்பு

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை காலவரையறையின்றி ஒத்திவைக்கவேண்டும் என்று சீனாவும் பாகிஸ்தானும் சற்றுமுன்னர் கொண்டு வந்த நகர்வு, வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. ஒத்திவைக்கவேண்டும் என்பற்கு ஆததரவாக 16 நாடுகள் வாக்களித்தன.
விவாதித்து வாக்களிக்க வேண்டும் என 25 நாடுகள் விருப்புத் தெரிவித்தன. 6 நாடுகள் அந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதேவேளை – பிரேரணையின் பத்தாவது வாசகம் – இந்தப் பிரேரணையில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், இலங்கை அரசாங்கம், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றது. அதனை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. அதன் மீதும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 23 நாடுகள் அந்த வாசகத்தை நீக்கக்கூடாது என்றும் 14 நாடுகள் நீக்கவேண்டும் என்றும் தெரிவித்தன. 10 நாடுகள் அந்த வாக்களிப்பில் பங்குபற்வில்லை.
china_pak00312
http://www.jvpnews.com/srilanka/63605.html

Geen opmerkingen:

Een reactie posten